இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்ற மகேந்திர சிங் தோனி தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தோனி சமூக வலைதளங்கள் பயன்படுத்துவது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன் ஆக இருந்த மகேந்திர சிங் தோனி கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். மேடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே தோனி ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்தும் விடை பெற்று இருப்பார். ஆனால் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். மேலும் கிரிக்கெட்டை தாண்டி தோனி தன்னை பெரிதாக பிரபலமாகி கொள்ளாத ஒரு மனிதர்.
மற்ற கிரிக்கெட் வீரர்கள் போன்று சமூக வலைதளங்களில் பதிவுகளை இடுவதும், பொது விழாக்களில் அதிக அளவில் பங்கேற்பதும் என பெரிதாக எதிலும் ஆர்வம் கொள்ளாதவராக இருப்பார். தோனி முன்பே ஒரு பேட்டியில் தான் சமூக வலைதளங்களை அதிக அளவில் பயன்படுத்த மாட்டேன் எனவும் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்காக போட்டோக்கள் போடுவது பிடிக்கும் என்று கூறிய நிலையில் தற்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தோனி கிரிக்கெட் நன்றாக விளையாடினாலே எப்போதும் பிரபலமாவதற்கு பெரிதாக ஒன்றும் செய்யத் தேவையில்லை என்று சமூக வலைதளம் குறித்து தனது பார்வையை தோனி கூறி இருக்கிறார்.
இது குறித்த தோனி கூறும் பொழுது ” நான் சமூக வலைதளங்களை பெரிய அளவில் பயன்படுத்த மாட்டேன். எனக்கு என்று தனித்தனி நிர்வாகிகள் இருக்கிறார்கள். நான் 2004 ஆம் ஆண்டு கிரிக்கெட் விளையாட துவங்கிய காலகட்டத்தில் தான் ட்விட்டர் அதிக அளவில் பிரபலமானது. அதற்குப் பிறகு சில வருடங்கள் கழித்து இன்ஸ்டாகிராம் வந்தது. என்னுடைய மேலாளர்கள் சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்துவதற்காக பிஆர் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்கள்.
இதையும் படிங்க:இந்தியா பாகிஸ்தானுக்கு வருமா.? இது மூலமா ஐசிசி யாருக்கு சப்போர்ட்னு தெரியும்- சல்மான் பட் பேட்டி
ஆனால் நான் கிரிக்கெட் நன்றாக விளையாடினாலே போதும் விளம்பரம் தேவையில்லை என்று கூறினேன். மேலும் பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் பைக் சவாரி செய்ய விரும்ப மாட்டார்கள். என்றால் எதிர்பாராத விதமாக ஒரு விபத்து ஏற்பட்டால் கை, கால் முழங்கை முழங்கால் என்று அடிபட்டால் கிரிக்கெட் விளையாடுவது சிரமம் ஏற்படும். அதனால் பெரும்பாலும் அதனைத் தவிர்த்து விடுகிறார்கள்” என்று மகேந்திர சிங் தோனி கூறியிருக்கிறார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

