ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையே எட்டி உள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டியை யார் வெல்வது என்று எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்து வந்த நிலையில். இந்தப் போட்டியானது தற்போது மழையினால் டிராவில் முடிந்துள்ளது.
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்த நிலையில், கே.எல்.ராகுல் மட்டும் மற்ற பேட்மேன்களை விட இந்திய அணி வெற்றிக்காக போராடினார்.
இந்நிலையில், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் கே.எல்.ராகுலை பற்றி இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் சில கருத்துக்களை கூறியுள்ளார்.
மக்கள் நன்றியை மறந்து விடுகிறார்கள், தினேஷ்:
கிரிக்பஸ்ஸிடம் பேசிய அவர், “இந்தியாவுக்குத் தேவையான தொடக்க ஆட்டக்காரராக கே.எல்.ராகுலை பெற்றிருக்கிறது என்று நான் நம்புகிறேன். மக்கள் அவரே தொடர்ந்து ஆதரிப்பார்கள் என்றும் நான் நம்புகிறேன். அடுத்த ஆண்டு ஏதாவது ஒரு தொடரில், அவர் சில குறைந்த அளவிலான ரன்களை எடுத்திருந்தாலும், மக்கள் அதைப் பற்றி சீக்கிரம் மறக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அவர் இந்திய அணிக்காக செய்துள்ளதையும்; இன்று அவர் இந்திய அணியின் வெற்றிக்காக செய்த செயல்களையும் நாம் மதிக்க வேண்டும். அது மிகவும் முக்கியமானது.
வெளிநாட்டில் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை வைத்து டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களை மக்கள் மதிப்பிடுகிறார்கள், இது ஒரு தவறான உதாரணம். மேலும் நீண்ட காலமாக நாட்டுக்காக விளையாடிய அனைத்து வீரர்களை போலவே ராகுலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்”.
அவரின் பெயர் தான் முதல் இடத்தில் இருக்கும்:
மேலும் அவர், “மக்கள் எப்பொழுதும் ராகுலின் நிலை தன்மையை குறை கூறுகிறார்கள், நான் அவரின் நிலை தன்மையை பற்றி பேச விரும்பவில்லை. ஏனென்றால் அவரின் பேட்டிங் சராசரியே அனைத்தையும் காட்டுகிறது. மக்கள் நினைப்பதை விட அவர் எல்லாவற்றிலும் சிறந்தவராக திகழ்கிறார்.
இதையும் கொஞ்சம் படியுங்க: யாரு சாமி நீ.. இந்த இந்திய வீரரை பார்த்தா.. வாசிம் அக்ரம் வலது கையில் வீசின மாதிரி இருக்கு.. நான் மட்டும் ஆடி இருந்தா வெறுத்திருப்பேன்.. ஜஸ்டின் லாங்கர்
வெளிநாட்டில் சுற்றுப்பயணம் செய்யத் திட்டமிடும் இந்திய அணியை நீங்கள் எடுத்துக் கொண்டால், அந்த பட்டியலில் முதல் பெயர்களில் ஒருவராக ராகுல் இருப்பார், ஏனெனில் இந்திய அணி அவரிடம் என்ன எதிர்பார்க்கிறது, அவரிடமிருந்து மக்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பது அவருக்குத் தெரியும்,” என்று முடித்தார், தினேஷ் கார்த்திக்.

