இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை மூன்று போட்டிகள் நிறைவடைந்து இருக்கிறது.
இந்த நிலையில் விராட் கோலியின் பேட்டிங் குறித்து இந்திய முன்னாள் வீரர் கவாஸ்கர் விமர்சனம் செய்திருந்த நிலையில் அது குறித்து விராட் கோலியின் சிறு வயது பயிற்சியாளர் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் அடித்து இருந்தாலும் அதற்குப் பிறகு தொடர்ச்சியாக மூன்று இன்னிங்ஸ்களில் ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்படும் பந்துகளை எதிர்கொண்டு தொடர்ந்து அவுட் ஆகி வருகிறார். இது இதற்கு முன்னர் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் அப்படியே பிரதிபலித்தது. இந்த நிலையில் சுனில் கவாஸ்கர் விராட் கோலி அது போன்ற ஷாட்கள் விளையாடுவதை தவிர்த்து பேட்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டும் என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் விராட் கோலியின் சிறு வயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா கூறும்போது “விராட் கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேன். அவரது பேட்டிங் பரிந்துரைகள் எப்போதுமே வரவேற்கப்படுகிறது. ஆனால் அவர் மற்றவர்களுக்கும் பேட்டிங் பரிந்துரைகள் வழங்குவார் என்று நம்புகிறேன். விராட் கோலி இந்திய அணி 2008 ஆம் ஆண்டு முதல் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். எனவே அவரது பேட்டிங் குறித்து சுனில் கவாஸ்கர் பேசுவது நியாயமற்றது.
இரண்டு இன்னிங்ஸ் சரியாக விளையாடாத நிலையில் முதல் போட்டியில் விராட் கோலி சதம் அடித்திருக்கிறார். புள்ளி விவரங்கள் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் விராட் கோலி எந்த மாதிரியான திறமை கொண்ட வீரர் என்பது நன்றாக தெரியும். விமர்சனம் செய்ய முடியாத அளவிற்கு இந்திய கிரிக்கெட்டில் நிலையாக ரன்கள் எடுக்கக்கூடிய வீரர். மேலும் விராட் கோலியின் பேட்டிங் டெக்னிக் மற்றும் மனதில் எந்த விதமான பிரச்சினையும் கிடையாது.
இதையும் படிங்க:என்னப்பா இதெல்லாம்.. அப்பாவை மன்னிச்சு விட்ருங்க.. அவர் சொன்ன இதை வச்சு நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு எதிர்பார்க்கல.. அஸ்வின் பேட்டி
மேலும் விளையாட்டில் முதிர்ச்சி அடைந்த வீரராக விராட் கோலி இருக்கிறார். அவர் விளையாட்டை நன்றாக புரிந்து கொண்டுள்ளார். நாங்கள் சமீபத்தில் சந்தித்து பேசிக்கொண்டோம். வெளியே பகிர முடியாத சில விஷயங்கள் நாங்கள் பகிர்ந்து கொண்டோம். விராட் கோலி போதுமான அளவிற்கு முயற்சி அடைந்த வீரர். எனவே என்ன தவறு செய்கிறார் என்று அவருக்கு நன்றாக தெரியும். அவர் மீண்டும் பழைய நிலைக்கு வருவதை இந்தத் தொடரிலேயே காணலாம்” என்று கூறியிருக்கிறார்.

