இது என்ன கம்பீருக்கு வந்த சோதனை.. அவர் முன்னே தோனியை புகழ்ந்த ரிங்கு சிங்.. அசத்தல் பேட்டிங் பின்பு பேட்டி.. இனி என்ன நடக்க போகுதோ

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே 3 போட்டிகளை கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியை இந்தியா வென்ற நிலையில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. மேலும் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் இறுதி டி20 போட்டி நாளை மறுநாள் ஹைதராபாத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.

- Advertisement -

முன்னதாக நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி இந்திய அணிக்கு தொடக்கத்தில் நெருக்கடியை கொடுத்தனர். இந்திய அணியின் துவக்க வீரர்களான சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் விரைவாக ஆட்டம் இழந்த நிலையில் கேப்டன் சூரியகுமார் யாதவும் 8 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து இணைந்த நிதிஷ் குமார் மற்றும் ரிங்கு சிங் ஜோடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டதோடு அதிக ரன்கள் குவிக்கவும் உதவியது. இருவரும் அதிரடியாக விளையாடி அரை சதம் எடுத்தனர். இவர்களின் அதிரடியால் 41 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்து தடுமாறிய இந்தியா 13.3 ஓவர்களில் 149 ரன்கள் குவித்தது. இவர்கள் இருவரும் நான்காவது விக்கெட்க்கு ஜோடியாக 48 பந்துகளில் 108 ரன்கள் குவித்தனர். அதிரடியாக விளையாடிய நிதிஷ்குமார் ரெட்டி 33 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதில் 7 சிக்ஸர்களும் 4 பவுண்டரிகளும் அடங்கும். இவருடன் அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங் 29 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 5 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். இவர்களின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 221 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து ஆடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 135 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியின் முடிவில் பேசிய ரிங்கு சிங் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியுடன் பேசிய உரையாடல்கள் போட்டியின் பரபரப்பான சூழ்நிலையிலும் அமைதியாக இருப்பதற்கு உதவியதாக தெரிவித்திருக்கிறார்.

இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை பலமுறை விமர்சித்து இருக்கிறார். இந்நிலையில் அவருக்கு முன்பாக இந்திய வீரர் ரிங்கு சிங் மகேந்திர சிங் தோனியை பாராட்டி இருப்பது கிரிக்கெட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. போட்டி முடிவடைந்ததும் வர்ணனையாளர் முரளி கார்த்திகிடம் பேசிய ரிங்கு சிங் போட்டியின் கடினமான நேரங்களில் பதட்டமில்லாமல் நிதானமாக இருக்க வேண்டும் என்று எனக்குள்ளே கூறிக் கொண்டேன். பதட்டமான சூழ்நிலையிலும் அமைதியாக இருப்பது எனக்கு இயற்கையாகவே கிடைத்த வரம் . பெரும்பாலான போட்டிகளில் இக்கட்டான சூழ்நிலையில் களம் இறங்குகிறேன். அதனால் பரபரப்பான சூழ்நிலையில் அமைதியாக இருப்பது எனக்கு இயற்கையாகவே வந்திருக்கிறது” என தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” போட்டியின் போது இக்கட்டான நேரங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து அதிகமாக பயிற்சி செய்கிறேன். மேலும் எம்.எஸ் தோனி பாயுடன் நான் மேற்கொண்ட உரையாடல்கள் இது போன்ற சூழல்களில் அதிகமாக உதவி செய்கிறது. அவரது அறிவுரையின்படி இது போன்ற சூழ்நிலைகளில் விளையாடுகிறேன். எங்கள் அணி 3 அல்லது 4 விக்கெட் விரைவாக இழந்திருக்கும் சூழ்நிலையில் களத்திற்கு வரும்போது நம்முடைய தன்னம்பிக்கை அதிகமாக இருக்க வேண்டும். அப்போதுதான் சிறப்பாக செயல்பட முடியும்” என தெரிவித்தார்.

நிதீஷ் குமார் உடனான பார்ட்னர்ஷிப் குறித்து பேசிய ரிங்கு சிங் “நாங்கள் இருவரும் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்க வேண்டும் என்று முடிவு செய்தோம். நான் பேட்டிங் செய்ய வந்தபோது ஆடுகளம் மெதுவாக இருந்தது. இதன் காரணமாக தொடக்கத்தில் 1 மற்றும் 2 ரன்கள் சேர்த்தோம். மேலும் மோசமான பந்துகளை பௌண்டரிகளுக்கு விளையாடினோம். பங்களாதேஷ் அணியின் வீரர் மஹ்முதுல்லாஹ் வீசிய நோ பால் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. அந்த ஓவரில் இருந்து நாங்கள் அதிரடியாக விளையாடினோம். இதனால் வேகமாக ரன்கள் குவிக்க முடிந்தது” என தெரிவித்திருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles