யாருமே இதை பார்த்திருக்க மாட்டாங்க.. தன்னைத் தானே ரன் அவுட் ஆக்கிய ஆப்கானிஸ்தான் வீரர்.. கிரிக்கெட் ரசிகர்கள் வியப்பு

தென்னாப்பிரிக்கா அணி, ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்து அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுடன் டி20 மற்றும் ஒரு நாள் போட்டி தொடர்களில் விளையாடி வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்து முடிந்த ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான ஒரு நாள் போட்டி தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ளது.

- Advertisement -

இந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வரலாற்று சாதனை படைத்தது. இந்நிலையில் நேற்று சார்ஜாவில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் வீரர் ரஹ்மத் ஷா ரன் அவுட் ஆன விதம் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. கிரிக்கெட்டில் எப்போதாவது இதுபோன்ற ஆட்டம் இழப்புகள் நிகழும். அது போன்ற ஒரு சம்பவம் தான் நேற்று நடைபெற்றது.

- Advertisement -

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தென்னாப்பிரிக்கா அணியின் சிறப்பான பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் ரன்கள் எடுக்க முடியாமல் திணறினர். இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய ரஹ்மானுல்லா குர்பாஸ் நேற்றைய போட்டியிடும் சிறப்பாக விளையாடி 94 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் ஆப்கானிஸ்தான் 34 ஓவர்களில் 170 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணி தொடக்கத்தில் 3 விக்கெட்டுகள் இழந்தாலும் அந்த அணியின் துணை கேப்டன் எய்டன் மார்க்ரம் சிறப்பாக விளையாடி தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். தென்னாப்பிரிக்கா அணி 33 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. சிறப்பாக விளையாடிய மார்க்ரம் 67 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்த போது வினோதமான ரன் அவுட் நிகழ்ந்தது. அந்த அணியின் பேட்டிங்கின் போது ஒன்பதாவது ஓவரை தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி வீசினார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் குர்பாஸ் நேராக அடித்தார். அப்போது பந்து இங்கிடியின் கையில் பட்டு மறுமுனையில் நின்ற ரஹ்மத் ஷா உடம்பில் பட்டு நான்ஸ்ட்ரைக்கர் முனையில் உள்ள ஸ்டம்ப்புகள் மீது பட்டது.

- Advertisement -

அப்போது ரஹ்மத் ஷா கிரீசுக்கு வெளியே இருந்ததால் ரன் அவுட் ஆனதாக நடுவரால் அறிவிக்கப்பட்டார். இதனால் அவர் 6 பந்துகளில் 1 ரன் எடுத்த நிலையில் துரதிஷ்டவசமான முறையில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அவர் தன்னைத் தானே ரன் அவுட் செய்து கொண்டார் என சமூக வலைதளவாசிகள் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இது போன்ற வினோதமான சம்பவங்கள் கிரிக்கெட்டில் எப்போதாவது நடக்கும். அது கிரிக்கெட் ரசிகர்களிடம் வைரலாக பரவி விடும். அதுபோன்ற ஒரு சம்பவம் தான் நேற்றைய ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டியிலும் நடைபெற்றது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles