வீடியோ.. 6,6,6,6,6.. ரஷித் கான் ஓவரில் பொல்லார்ட் மின்னல் பேட்டிங்.. ஹண்ட்ரட் தொடரில் ரன் மழை.. மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் ஏக்கம்

உலக கிரிக்கெட்டில் டி20 கிரிக்கெட் வடிவத்தின் வளர்ச்சியை தொடர்ந்து குறைந்த ஓவர்களை கொண்ட பல்வேறு வெள்ளை பந்து கிரிக்கெட் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. டி20 போட்டிகளைப் போல டி10 என்ற 10 ஓவர்களைக் கொண்ட கிரிக்கெட் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் வெற்றியை தொடர்ந்து தி 100 என்ற 100 பந்துகளை கொண்ட கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்து அறிமுகப்படுத்தியது.

- Advertisement -

8 அணிகள் பங்குபெறும் இந்த போட்டி தொடர் 2021 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் இங்கிலாந்து நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது. தி 100 கிரிக்கெட் தொடரின் நான்காவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி கிரிக்கெட் நட்சத்திரங்களும் இந்தத் தொடரில் பங்கெடுத்து விளையாடி வருகின்றனர் .

- Advertisement -

இந்நிலையில் நேற்று நடைபெற்ற 100 தொடரின் 24 ஆவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தற்போதைய பேட்டிங் பயிற்சியாளரான கைரன் பொல்லார்டு 5 பந்துகளில் தொடர்ச்சியாக 5 சிக்ஸர்கள் அடித்து புதிய சாதனை படைத்திருக்கிறார். ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியின் சாம்பியன் பந்து வீச்சாளரான ரஷீத் கானின் பந்து வீச்சிக்கு எதிராக கைரன் பொல்லார்டு இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.

- Advertisement -

நேற்று நடைபெற்ற போட்டியில் சதர்ன் பிரேவ்ஸ் மற்றும் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணியினர் 100 பந்துகளில் 126 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் இழந்திருந்தது. அந்த அணியின் டாம் பேன்டன் அதிகபட்சமாக 17 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் உடன் 30 ரன்கள் எடுத்தார். இதனைத் தொடர்ந்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சதர்ன் பிரேவ்ஸ் அணியினர் களம் இறங்கினர்.

சதர்ன் பிரேவ்ஸ் அணியினர் தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். அந்த அணி 78 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்திருந்த நிலையில் 20 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணியின் கேப்டன் ரசீத் கானை பந்து வீச அழைத்தார். அந்த ஓவரின் 5 பந்துகளையும் சிக்ஸர்களுக்கு விரட்டி புதிய சாதனை படைத்ததோடு தனது அணியையும் வெற்றிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் கைரன் பொல்லார்டு.

- Advertisement -

தி 100 போட்டியில் ஒரு ஓவரில் வீசப்பட்ட 5 பந்துகளும் சிக்ஸர்களுக்கு அடிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். கைரன் பொல்லார்டு, ரசீது கான் வீசிய 5 பந்துகளையும் சிக்ஸர்களுக்கு விரட்டி அடித்ததை தொடர்ந்து என்ன செய்வதென்று தெரியாமல் ரஷித் கான் களத்தில் நின்றார். அணியின் வெற்றிக்கு 10 பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 23 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்திருந்த கைரன் பொல்லார்டு ஆட்டம் இழந்தார்.

இவரைத் தொடர்ந்து களம் இறங்கிய கிரிஷ் ஜோர்டான் பவுண்டரி அடித்து தங்களது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்த வெற்றியின் மூலம் சதர்ன் பிரேவ்ஸ் அணியினர் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கின்றனர். தி 100 போட்டியின் ஒரு ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்த கைரன் பொல்லார்டு ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இவர் இலங்கை அணிக்கு எதிராக 2021 ஆம் நடைபெற்ற டி20 போட்டியில் அகிலா தனஞ்செயா வீசிய ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனை படைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது அதிரடி சிக்ஸர்களின் வீடியோ இந்த பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles