இதைவிட பெரிய கவுரவம் எனக்கு வேறு என்ன இருக்க முடியும்.. நான் இதில் பங்கேற்க உற்சாகமாக இருக்கிறேன் – தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரோடு அனைத்து வடிவில் ஆன கிரிக்கெட் தொடரில் இருந்தும் ஓய்வு பெற்றிருக்கிறார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் தினேஷ் கார்த்திக் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய கௌரவம் ஒன்றை வழங்கி இருக்கிறது.

- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடருக்கு அடுத்தபடியாக தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் எஸ்ஏ டி20 லீக் தொடர் மக்களிடையே தற்போது அதிக அளவு வரவேற்பு பெற்று இருக்கிறது. இது தென் ஆப்பிரிக்க அணிக்கு அந்த நாட்டு மக்களிடையே கிரிக்கெட்டை ஊக்கப்படுத்தவும், மேலும் பொருளாதார ரீதியாகவும் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்திற்கு மிகப்பெரிய நன்மை பயக்கும்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் எஸ்ஏ டி20 லீக் கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் பிரிட்டனில் பிரபலப்படுத்தும் நோக்கில் இந்திய முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக்கை அதன் தூதுவராக அறிவித்திருக்கிறது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம். இதன் மூலம் தென்னாப்பிரிக்கா மக்களிடையே மட்டும் இன்றி இந்தியா மற்றும் இங்கிலாந்திலும் இந்தத் தொடர் நன்கு பிரபலமடையும் என்று கருதுகிறது.

இது குறித்து தினேஷ் கார்த்திக் கூறும் போது “நான் தற்போது மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இது உலகில் நடைபெற்று வரும் டி20 பிரான்சிஸ் லீக்கில் மிகவும் முக்கியமான தொடராகும். இதைவிட எனக்கு பெரிய கௌரவம் கிடைக்காது என்று நினைக்கிறேன். இந்த தொடரின் பிராண்ட் தூதுவராக என்னை நியமிக்கப்பட்டது பெரிய மதிப்பும் கௌரவமாக நினைக்கிறேன். இதில் பங்கேற்க நான் தற்போது ஆவலாக இருக்கிறேன்.

- Advertisement -

இதைப் பார்க்க மக்கள் கூட்டமாகவும், குடும்பமாகவும் வருகிறார்கள். மேலும் இந்த தொடரானது மிகவும் தரமாக நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் பயனடைந்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது இதில் பங்கேற்க நான் மிகவும் ஆவலாக உள்ளேன்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:டிஆர்எஸ் விவகாரம்.. கோலி இதெல்லாம் நியாயமா அது அவுட்.. பந்து பேட்ல படல உங்களுக்கே தெரியுது.. ஆகாஷ் சோப்ரா பேச்சு

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஸ் தொடர்தான் அதிக அளவு மக்களிடையே வரவேற்பு பெற்று வந்த நிலையில் தற்போதைய டி20 கிரிக்கெட் தொடர் அதைவிட அதிக அளவு மக்களிடையே வரவேற்பு பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் வர்ணையாளராக தினேஷ் கார்த்திக் அவர்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இனி இந்த தொடரில் தூதுவராகவும் தினேஷ் கார்த்திக்கை பார்க்கலாம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles