இலங்கை அணிக்கு எதிராக மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் பங்கு பெற உள்ள இந்திய அணிக்கு டி20 அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக சூரியகுமார் யாதவை நியமித்ததை தொடர்ந்து முன்னாள் தேர்வு குழு தலைவர் ஸ்ரீகாந்த் தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்.
2022ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் இந்திய அணி அரை இறுதியில் தோல்வி அடைந்து வெளியேறிய பிறகு பெரும்பாலான போட்டிகளில் ஹர்திக் பாண்டியாதான் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு அணியை வழி நடத்தினார். அதற்குப் பின்னர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக வெளியேற, பிறகுதான் ரோகித் சர்மா இந்திய அணியின் டி20 கேப்டனாக பிறகு பொறுப்பேற்று இந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை வெற்றி பெறவும் வைத்தார்.
இந்த சூழ்நிலையில் டி20 ஃபார்மெட்டில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்றதை அடுத்து டி20 உலக கோப்பையில் துணை கேப்டனாக செயல்பட்ட பாண்டியா அடுத்த கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று பெரும்பாலானோர் எதிர்பார்த்த நிலையில், சூரியகுமார் யாதவ் கேப்டன் ஆக நியமிக்கப்பட்டார். இது பலருக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கௌதம் கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் கூட்டணி, பிட்னஸ் காரணமாகத்தான் ஹர்திக் பாண்டியாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி சூரியகுமார் யாதவை கேப்டனாக நியமித்ததாக அறிவித்தனர். இந்த சூழ்நிலையில் முன்னாள் தேர்வு குழு தலைவர் ஸ்ரீகாந்த் எதையும் மறைக்காமல் பயமின்றி ஓப்பனாக பேசுங்கள் என்று தேர்வு குழுவை சாடி இருக்கிறார்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “பாண்டியாவுக்கு சுமாரான ஃபிட்னஸ் என்ற காரணத்தை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். கடந்த ஐபிஎல் தொடரில் பாண்டியா பேட்டிங் செய்தது மட்டுமின்றி பந்தும் வீசி இருக்கிறார். ஆமாம் கடந்த ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாக செயல்படவில்லை என்பதால் மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்பதெல்லாம் வேறு கதை. ஆனாலும் அவர் டி20 உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்டார்.
இதையும் படிங்க:அடி தூள்.. யுவராஜ் சிங்கிற்க்கு அடித்த ஜாக்பாட்.. குஜராத் அணியில் முக்கிய பொறுப்பு.. களைகட்டும் ஐபிஎல் 2025
அதனால் சுமாரான ஃபிட்னஸ் என்ற காரணத்தை எல்லாம் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். சூரியகுமார் யாதவ் சிறந்த மனிதர். பாண்டியாவை போலவே அவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் பாண்டியாவை நாங்கள் கேப்டன் பதவியில் இருந்து நீக்குகிறோம். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நாங்கள் சூரியக்குமார் யாதவை கேப்டனாக நியமிக்கிறோம் என்ற உண்மையை தேர்வு குழு பயமின்றி வெளிப்படையாக சொல்லலாம்” என்று கூறி இருக்கிறார்

