கில்லுக்கு எதுக்கு துணை கேப்டன் பதவி?. அவர்கிட்ட அப்படி என்னதான் இருக்கு – ரகசிய முறைக்கும் அஜித் அகர்கர்

தற்போது நடைபெற இருக்கிற இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில், இந்திய அணிக்கு அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்டியா வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சூரியகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

மேலும் துணை கேப்டனாக சுப்மான் கில் ஒரு நாள் மற்றும் டி20 தொடருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறார். இது ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் வீரர்கள் பலரிடையேயும் ஆசிரியத்தையும், கேள்வியையும் ஏற்படுத்தி வருகிறது. இதற்கான விளக்கத்தை தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சுப்மான் கில் சீனியர் வீரர்கள் இல்லாத நிலையில் கேப்டனாக ஜிம்பாப்வே தொடருக்கு அறிவிக்கப்பட்டு ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று தனது கேப்டன் திறமையை நிரூபித்தார். பின்னர் சீனியர் வீரர்கள் இலங்கை தொடருக்கு திரும்பும் நிலையில் டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா தான் கேப்டன் ஆக நியமிக்கப்படுவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் ஹர்திக் பாண்டியா தற்போது ஒரு வீரராகவே அணியில் தொடரும் நிலையில், துணை கேப்டன் ஆக கூட அறிவிக்கப்படாமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் டி20 உலக கோப்பையில் துணை கேப்டனாக பதவி வகித்த அவர், நியாயமாக அடுத்த கேப்டன் பதவிக்கு அவர்தான் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இது யாருமே எதிர்பார்க்காத வகையில் டி20 தொடருக்கு சூரியகுமார் கேப்டன் ஆகவும், கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில் அஜித் அகர்கர் விளக்கத்தை அளித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் போது “சில வருடங்களாகவே மூன்று வடிவ கிரிக்கெட் ஃபார்மேட்டிலும் நல்ல பார்மில் கில் இருக்கிறார். தன் தரம் என்ன என்பதை அவர் நிரூபித்திருக்கிறார். எடுத்துக்காட்டாக ரிஷப் பண்ட் இப்போதுதான் இந்திய அணிக்குள் வந்திருக்கிறார். காயத்திற்கு பிறகு மீண்டும் திரும்பி இருக்கும் நிலையில் அவர் மீது அதிக சுமையை நாங்கள் சுமத்த விரும்பவில்லை. அதேபோல கே எல் ராகுலும் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் அதிகம் விளையாடுவதில்லை.

- Advertisement -

இதையும் படிங்க:நம்பிக்கையை மட்டும் விட்றாதீங்க.. கபில்தேவ் கவாஸ்கருக்கு கூட இப்படித்தான் நடந்துச்சு – இளம் வீரர்களுக்கு ஆறுதல் கூறும் பாலாஜி

ஹர்திக் பாண்டியாவுக்கும் காயம் பிரச்சனையாக இருப்பதால், நாங்கள் நிலையான கேப்டனை கருத்தில் கொண்டு சூரியகுமார் யாதவை கேப்டன் ஆக நியமித்தோம். அதேபோல கில்லுக்கும் சீனியர் வீரர்களுடன் விளையாடிய அனுபவம் இருப்பதால், இளம் வீரராக இருக்கும் நிலையில் எதிர்காலத்தை கருத்தல் கொண்டு அவரையே துணைக் கேப்டனாக நியமிக்க முடிவு செய்தோம்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles