பைனல் மேட்ச் அப்போ.. விராட்டும் ஹர்திக்கும் என்கிட்ட ஒன்னு சொன்னாங்க.. அதுதான் நான் அடித்து ஆட உதவிச்சு- அக்சார் பேட்டி

தற்போது நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரை இந்திய அணி வெற்றி பெற்று வரலாறு படைத்திருக்கிறது.

- Advertisement -

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் அக்சர் பட்டேல் பேட்டிங் செய்ய உள்ளே சென்றபோது விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா தன்னிடம் கூறியதை தற்போது வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகள் மோதிய போது முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி பவர் பிளேவில் முக்கிய மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது விராட் கோலி மட்டும் களத்தில் இருக்க, ஐந்தாவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய அக்சார் பட்டேல் முதல் பந்திலேயே பௌண்டரி அடித்து அதற்கு பின்னர் மொத்தமாக 31 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

விராட் கோலி மற்றும் அக்சார் பட்டேல் கூட்டணி ஜோடியாக 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்தக் கூட்டணி தான் இந்திய அணியின் ரன்கள் உயர்வதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் அக்சார் பட்டேல் தான் பேட்டிங் செய்ய வந்தபோது விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் கூறியதை முதன்முறையாக பேசியிருக்கிறார்.

இதுகுறித்து அக்சார் பட்டேல் கூறும்பொழுது “அன்றைய நாளில் ரிஷப் பண்ட் ஆட்டம் இழந்து வெளியேறிய போது, ரோஹித் சர்மா என் அருகில் நின்று கொண்டிருந்தார். ரோகித் என்னிடம் பேட்டிங் செய்ய தயாராகுமாறு கூறினார். மேலும் சாகல் என்னிடம் நான் முன்கூட்டியே பேட்டிங் செய்ய களமிறங்க வேண்டியதாக இருக்கும் என்று ராகுல் டிராவிட் கூறியதாக என்னிடம் கூறினார். இந்த நிலையில் சூரியகுமார் யாதவ் ஆட்டம் இழந்து வெளியேற நான் உள்ளே சென்றேன்.

- Advertisement -

நான் உள்ளே சென்றபோது ஹர்திக் பாண்டியா குஜராத்தி மொழியில் ‘பந்தைப் பார்த்து அதற்குப் பின்னர் அடித்து ஆடு’ என்று கூறினார். அப்போது மூன்று விக்கெட்டுகள் இழந்திருந்ததால் நான் ஆடுகளத்தை சோதிக்க எனக்கு நேரமில்லை. நல்ல வேலையாக நான் முதல் பந்திலேயே பவுண்டர் அடித்தேன். அது எனக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்தது.

இதையும் படிங்க:கில்லை விட திறமை இருந்தும்..சிஎஸ்கே வீரருக்கு வாய்ப்பே கிடைக்கல.. ஆனா கில்லுக்கு துணை கேப்டன் பதவி.. கோபத்தில் ரசிகர்கள்

அப்போது விராட் கோலி என்னிடம் ‘ஒரு பந்தை உங்களால் அடிக்க முடியும் என்று நினைத்தால், தயக்கமே இல்லாமல் அந்த பந்தை அடித்து விடுங்கள்’ என்று கூறினார் அவரது வழிகாட்டுதலின் பேரிலேயே நான் அன்றைய போட்டியில் விளையாடினேன். எங்களிடம் சிறந்த தகவல் தொடர்பு இருந்தது. அதற்குப் பின்னர் மீது நடந்ததெல்லாம் உங்களுக்கே தெரியும்,அது ஒரு வரலாறு” என்று கூறுகிறார். அன்றைய போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி உலக கோப்பையையும் வென்று வரலாறு படைத்திருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles