இந்திய அணியில் யாரை ரொம்ப பிடிக்கும்.. விராட்டா? பும்ராவா? பாண்டியாவா?- ரோஹித் சர்மாவின் சுவாரசிய பதில்

இந்திய கிரிக்கெட் அணி தற்போது 17 வருடங்கள் கழித்து டி20 உலக கோப்பையை வென்று இந்திய மக்களின் ஏக்கத்தை போக்கியிருக்கிறது என்று தான் கூற வேண்டும். அதை ஒரு கேப்டனாக ரோஹித் சர்மா செய்தும் காட்டி இருக்கிறார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் டி20 உலக கோப்பை விளையாடிய வீரர்களில் யாரை ரொம்ப பிடிக்கும்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ரோகித் சர்மா சுவாரசியமான பதிலை அளித்திருக்கிறார்.

- Advertisement -

ரோகித் சர்மா இந்திய அணியின் மூன்று வடிவ கேப்டனாக பொறுப்பேற்றது அவருக்கு ஒரு இக்கட்டான காலகட்டம் என்று கூறலாம். காரணம் பிசிசிஐக்கும் விராட் கோலிக்கும் ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு காரணமாக ரோகித் சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று வடிவ தொடர்களுக்கும் கேப்டனாக நியமிக்கப்படுகிறார். காரணம் அவர் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் சிறப்பாக வழி நடத்தி இருக்கிறார்.

- Advertisement -

2021ஆம் ஆண்டு ரோஹித் சர்மா மூன்று வடிவ தொடர்களுக்கும் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு இந்திய அணியையும் தனது அணுகுமுறைக்கு தகுந்தவாறு மாற்றினார். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார் என்றுதான் கூற வேண்டும். 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணியை ஆக்ரோஷமாக விளையாடும் முறைக்கு மாற்றி இந்திய வீரர்களை பழக்கி அதற்கேற்றார் போலவே டி20 உலக கோப்பையும் தற்போது வென்றிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரோகித் சர்மாவிடம் இந்திய அணியில் விளையாடிய வீரர்களில் யாரை அதிகமாக பிடிக்கும் என்று கேட்கப்பட்டது. அதற்கு சுவாரசியமாக பதில் அளித்த ரோகித் சர்மா “இந்திய அணியை பொறுத்தவரை அதில் விளையாடிய 15 வீரர்களில் என்னை தவிர மற்ற 14 பேரையும் எனக்கு பிடிக்கும். மேலும் நான் ஒரு கேப்டனாக இருந்து அணியை முன்மாதிரியாக வழி நடத்த விரும்பினேன்.

- Advertisement -

அதோடு மட்டுமல்லாமல் என் அணி வீரர்களை நண்பர்களாகவும், குடும்பமாகவும் இருக்க பயிற்சிகளை மேற்கொண்டேன். டி20 உலக கோப்பையை பொறுத்தவரை அதில் அமெரிக்க அணி மிகச் சிறப்பாக விளையாடியது. மேலும் அந்த அணியில் நிறையவே இந்திய வீரர்கள் இருக்கின்றனர்.

இதையும் படிங்க:ரோஹித் சர்மாவை நான் கிண்டல் அடிப்பேன்.. ஆனால் கோலியிடம் பேசுவது கூட கிடையாது.. அவர் மாறிவிட்டார்- அமித் மிஸ்ரா பேட்டி

ஒரு விளையாட்டை நான் எப்போதுமே ஊக்குவிக்க கூடியவன். சமீபகாலமாக இந்திய அணியில் எனது பேட்டிங் நன்றாக உள்ளது. எனவே அணிக்காக நான் இன்னும் சில காலம் விளையாட ஆர்வமாக இருக்கிறேன் அதை நீங்கள் நிச்சயம் எதிர்பார்க்கலாம் ” என்று கூறி இருக்கிறார். அடுத்ததாக இந்திய அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என்ற இரு பெரிய தொடர்கள் முன்னே இருக்கிறது. அதையும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை வென்று கொடுத்து வரலாறு படைக்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles