இந்தியாவின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்த அமித் மிஸ்ரா தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
இந்த சூழ்நிலையில் சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா குறித்து வெளிப்படையான கருத்துக்களை பேசி அதிர வைத்திருக்கிறார்.
அமித் மிஸ்ராவை பொறுத்தவரை விராட் கோலியின் தலைமையில் கீழ் 2008 ஆம் ஆண்டு அறிமுகமாகி 9 டெஸ்ட் போட்டிகள் இதுவரை விளையாடியிருக்கிறார். ஐபிஎல் தொடரில் தற்போது லக்னோ அணிக்காக விளையாடி வரும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வருகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியின்போது தன்னுடன் தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்கள் இதற்கு முன்னர் விளையாடிய வீரர்கள் என்று அனைவர் குறித்தும் எதையும் மறைக்காமல் வெளிப்படையான பேட்டியை அளித்திருக்கிறார்.
இந்த நிலையில் அவரிடம் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுடனான நட்பு குறித்து கேட்கப்பட்டது. அதற்கும் வெளிப்படையாகவே பதில் அளித்த அமித் மிஸ்ரா இது குறித்து அவர் கூறும் பொழுது “மகேந்திரசிங் தோனிக்கும், சச்சின் டெண்டுல்கருக்குமான மரியாதை ஒரே மாதிரியாக எல்லாருக்கும் நேர்மையாக இருக்க முடியாது. என்னால் எது குறித்தும் பொய் சொல்ல முடியாது. ஒரு கிரிக்கெட் வீரராக விராட் கோலியை நான் மிகவும் மதிக்கிறேன்.
ஆனால் அப்போது இருந்த நட்பு போல தற்போது விராட் கோலியிம் எதையும் நட்புணர்வோடு பேச முடியாது. ஆனால் இதற்கு ரோகித் சர்மா முற்றிலும் மாறுபட்டவர். அப்போது, இப்போது என இல்லாமல் எப்போதும் ஒரே மாதிரியான இயல்பை வெளிப்படுத்தக் கூடிய நபர். அவரிடம் ஐந்து ஐபிஎல் கோப்பைகள் இருக்கிறது, ஒரு டி20 உலகக் கோப்பை இருக்கிறது என்கிற கர்வம் எல்லாம் அவரிடம் துளி கூட கிடையாது.
நாங்கள் முன்னர் எப்போது பார்த்து பேச ஆரம்பித்தோமோ அதே மாதிரி தான் தற்போதும் பேசிக் கொள்வோம். அவர் என்னை சகஜமாக கிண்டல் அடிப்பார். நானும் அவரை கிண்டலடிக்கும் உரிமையும் கொடுத்திருக்கிறார். அவர் என்ன யோசிப்பார் என்பது குறித்து எல்லாம் நாம் எதையும் சிந்திக்க வேண்டியது இல்லை. விராட் கோலி நிறையவே மாறிவிட்டார் என்று தோன்றுகிறது.
இதையும் படிங்க:மரியாதையோடு இருங்கள் நண்பர்களே.. வேண்டுகோள் விடுத்த ரோஹித்.. ரசிகர்கள் செய்த செயல்.. அதிர்ந்த அரங்கம்
நாங்கள் பேசுவதையே நிறுத்தி விட்டோம். உங்களுக்கு புகழும், அதிகாரமும் கிடைக்கும் போது ஏதோ காரணத்திற்காக நம்மிடம் வருகிறார்கள் என்று நினைக்கிறார்கள். நான் உண்மையில் அப்படிப்பட்ட நபர் கிடையாது. விராட் கோலியை அவரது 14 வயதில் சமோசா சாப்பிடும் காலத்தில் இருந்து தெரியும். வெளியே சந்திக்கும் போது மிகவும் மரியாதை கொடுக்கும் நபராக இருப்பார்.ஆனால் வெளிப்படையான நட்பு இல்லை” எனக் கூறியிருக்கிறார்.

