மரியாதையோடு இருங்கள் நண்பர்களே.. வேண்டுகோள் விடுத்த ரோஹித்.. ரசிகர்கள் செய்த செயல்.. அதிர்ந்த அரங்கம்

இந்திய கிரிக்கெட் அணி 17 வருடங்களுக்குப் பிறகு டி20 உலக கோப்பையை வென்று சாதனை படைத்திருக்கிறது. இந்த உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு முக்கிய காரணமாக அமைந்தவர் கேப்டன் ரோகித் சர்மா.

- Advertisement -

இந்த நிலையில் அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது பங்கேற்ற ரோஹித் சர்மாவுக்கு ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது.

- Advertisement -

2022 டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்து அரை இறுதியில் வெளியேறிய இந்திய அணி, அதற்குப் பிறகு தனது டி20 அணுகுமுறையை முற்றிலுமாக மாற்றியது. முதல் 10 ஓவருக்கு அடித்தளத்தை அமைத்து அடுத்த பத்து ஓவர்களுக்கு அதிரடியாக ஆடும் முறையை மாற்றி தொடக்கத்தில் இருந்து அதிதியாக ஆடும் முறையை ரோகித் சர்மா இந்திய வீரர்களுக்கு பழக்கினார்.

- Advertisement -

அதை வெறும் வாய்ச் சொல்லாக மட்டும் இல்லாமல் தானே தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி முதல் பந்தில் இருந்தே அதிரடியாக ஆடும் ஆட்டம் முறையை கொண்டு வந்தார். இதனைப் பின்பற்றிய இந்திய வீரர்கள் டி20 உலக கோப்பையில் தொடக்கத்தில் இருந்தே விக்கெட்டுகள் வீழ்த்தாலும் அதனை பற்றி கவலைப்படாமல் அதிரடியாக ஆடும் முறைக்கு மாறினார்கள். குறிப்பாக சூப்பர் 8 போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தொடக்க வீரராக களம் இறங்கிய இந்தியாவின் ரோகித் சர்மா பலமான அணிக்கு எதிராகவும் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

குறிப்பாக ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் ஸ்டார்க்கின் ஒரே ஓவரில் 6,6,4,6,0,6 என 28 ரன்கள் குவித்தார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் ஸ்டார்க்கின் பந்துவீச்சில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையையும் ரோஹித் சர்மா படைத்தார். மேலும் இந்திய அணி இந்த டி20 உலக கோப்பையையும் வென்று வரலாறு படைத்தது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ரோஹித் சர்மா உரையாடச் சென்றபோது அங்கு இருந்த ரசிகர்கள் “ஸ்டார்க், ஸ்டார்க்” என கூச்சலிட்டனர். அப்போது ரோஹித் சர்மா “ஒரு நிமிடம் அமைதியாக இருங்கள் நண்பர்களே அனைவரும் மரியாதையுடன் இருங்கள்” என்று கூறினார். அதாவது ஸ்டார்க்கும் ஒரு தரமான பந்துவீச்சாளர் தான் எனவும் அன்றைய நாள் அவருக்கு சரியாக அமையவில்லை என்று கூறினார்.

இதையும் படிங்க:இந்திய கேப்டன்களில் நான் ரசிப்பது இவர் ஒருவரை தான்.. அதற்குக் காரணமும் இதுதான்- கில் பேட்டி

அதை சொன்ன போது ரசிகர்கள் மேலும் ஆக்ரோஷமாக சத்தம் எழுப்பத் தொடங்கிய போது ரோஹித் சர்மா சிரித்துக் கொண்டே “அமைதியாக இருங்கள்” என்று பேச ஆரம்பித்தார். அப்போது டி20 கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வினை அறிவித்தாலும் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை எனவும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி அறிவித்திருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles