உலக லெஜெண்ட் சாம்பியன்ஸ் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இறுதிப்போட்டியில் இந்தியா சாம்பியன், பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.
ஓய்வு பெற்ற உலகின் முன்னணி வீரர்கள் பங்குபெறும் உலக சாம்பியன்ஷிப் லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் தொடர் தென்னாபிரிக்காவில் தற்போது நடைபெற்று வந்த நிலையில், தற்போது அதன் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் என நான்கு அணிகள் தகுதி பெற்ற நிலையில், பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், இரண்டாவது அரை இறுதி போட்டி இரவு 9 மணிக்கு நடைபெற்றது .
நார்த்தாம்டனில் நடைபெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் உத்தப்பா 35 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 65 ரன்கள் குவித்தார். அதற்குப் பின்னர் களம் இறங்கிய கேப்டன் யுவராஜ் சிங் 28 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்சர்களுடன் 58 ரன்கள் குவித்தார்.
பின்னர் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய பதான் சகோதரர்களான இர்பான் பதான் மற்றும் யூசுப் தான் ஆகியோர் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 96 ரன்கள் குவித்தனர். இதில் யூசுப் பதான் 23 பந்துகளில் 51 ரன்களும், இர்ஃபான் பதான் 19 பந்துகளில் 50 ரன்கள் குவித்தனர்.
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 168 ரன்கள் மட்டுமே குவித்த நிலையில் 86 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா சாம்பியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் பெயின் 32 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக கவுல்டர் நைல் 13 பந்துகளில் 30 ரன்கள் குவித்தார்.
இதையும் படிங்க:தோனி இல்லை.. சிஎஸ்கே வின் சிறப்பாக விளையாடும் வீரர் இவர்தான்.. சுரேஷ் ரெய்னா பேட்டி
இன்று நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் மற்றும் இந்திய சாம்பியன்ஸ் மோத உள்ளன. இது இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு நடைபெற உள்ளது. இரண்டு அணிகளுமே தற்போது பேட்டிங் பந்து வீச்சு என இரு துறைகளிலும் வலுவாக இருப்பதால் இந்தப் போட்டி ரசிகர்களுக்கு பரபரப்பான போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

