வெளிநாட்டில் தஞ்சம் அடைந்த ரோகித் கோலி.. இத்தனை நாள் ஓய்வா.? இந்திய அணிக்கு எப்போது திரும்புவார்கள்.. விபரம்

டி20 உலக கோப்பையை வென்றுள்ள இந்திய சீனியர் கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்ற கையோடு அவர்களுக்கு தற்போது ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மற்ற முன்னணி வீரர்கள் அனைவரும் அடுத்த தொடருக்கு திரும்பும் பட்சத்தில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் நீண்ட விடுமுறை கேட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

பல நெருக்கடிகளுக்கு மத்தியில் அழுத்தமான சூழ்நிலைகளில் ஐபிஎல் மற்றும் டி20 உலக கோப்பை என தொடர்ந்து சீனியர் வீரர்கள் கிரிக்கெட் விளையாடி வருவதால் அவர்களுக்கு ஓய்வு அளிக்கும் விதமாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடருக்கு கில் தலைமையிலான இந்திய இளம் அணி அனுப்பப்பட்டுள்ளது. இத்தொடர் முடிந்து அடுத்ததாக இலங்கை அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் இந்திய அணி பங்கேற்க உள்ளது.

- Advertisement -

இந்தத் தொடருக்கு ரிஷப் பண்ட், சூரியகுமார் யாதவ், பும்ரா ஆகிய முன்னணி வீரர்கள் திரும்பும் வேளையில் கிரிக்கெட்டை பொருத்தவரை தற்போது அதிக ரசிகர்களைக் கொண்ட வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தற்போது வெளிநாட்டில் இருக்கிறார்கள். ரோஹித் சர்மா தனது குடும்பத்தாரோடு வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பதாகவும், விராட் கோலி லண்டனில் தனது குடும்பத்தாருடன் வசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த சூழ்நிலையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்திய அணிக்கு எப்போது திரும்புவார்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்திய அணிக்கு இலங்கை தொடர் முடிந்தவுடன் அடுத்ததாக செப்டம்பர் மாதத்தில் வங்கதேச அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் செப்டம்பர் 19ஆம் தேதி இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளதால் இந்த போட்டிக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கு இந்த இருவருமே விடுமுறை கேட்டிருப்பதால் செப்டம்பர் மாதத்தில்தான் இந்திய அணியில் இணைவார்கள். இதனால் தற்போது இரண்டு மாதத்திற்கு மேல் விடுமுறையில் இருக்கப் போகிறார்கள்.

இதையும் படிங்க:இதுவரைக்கும் பார்த்தது ட்ரெய்லர்.. இவரோட மெயின் ஆட்டமே இனிமேதான்- பிரெட்லீ எச்சரிக்கை

வங்கதேச அணிக்கு எதிரான தொடரை முடித்தவுடன் அக்டோபர் மாதத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், அதற்குப் பிறகு ஆஸ்திரேலியா சென்று அங்கு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. விராட் மற்றும் ரோகித் ஆகிய இருவருமே தற்போது டி20 ஃபார்மெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதால் இனி ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles