இந்திய கிரிக்கெட் அணி தற்போது டி20 உலக கோப்பை வென்ற உற்சாகத்தில் இருக்கிறது. இருப்பனும் இந்தியாவின் முன்னணி வீரர்கள் ஆன ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் தங்களது ஓய்வு டி20 ஃபார்மேட்டில் இருந்து அறிவித்திருக்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த வீரர் ஒருவரை புகழ்ந்து பேசி இருக்கிறார்.
இந்த டி20 உலக கோப்பை வெற்றியை இந்திய வீரர்கள் மட்டுமின்றி தற்போது 140 கோடி மக்களும் கொண்டாடி வருகின்றனர். கிரிக்கெட் என்பது இந்தியாவில் ஒரு விளையாட்டு என்பதை தாண்டி ஒரு மதம் போல அனைவரின் மனதிலும் மேலோங்கி இருக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட உலகக் கோப்பையை 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு எந்த ஒரு ஐசிசி தொடரையும் வெல்லாமல் இந்திய அணி இருந்தது.
இந்த சூழ்நிலையில் மகேந்திர சிங் தோனிக்கு அடுத்ததாக ரோகித் சர்மா தலைமையில் தற்போது டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி சாதனை படைத்துள்ளது. குறிப்பாக இந்திய அணியில் பும்ராவை போலவே தொடர்ச்சியாக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் சாதித்தவர் ஹர்திக் பாண்டியா. எப்போதெல்லாம் இந்திய அணி ரன்கள் குறைவாக இருக்கிறதோ அப்போதெல்லாம் பேட்டிங்கிலும், விக்கெட் தேவைப்படும் சூழலில் பந்துவீச்சில் விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் ஐபிஎல்லின் போது தானும் ஹர்திக் பாண்டியாவை விமர்சித்ததாகவும், தற்போது அதை தாண்டி டி20 உலக கோப்பையில் ஜெயித்திருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார். இதைத் தாண்டி அவர் விரிவாக கூறும்பொழுது ” ஹர்திக் பாண்டியாவுக்கு இந்த வெற்றி மிகவும் முக்கியமானது. ஏனெனில் அவர் தனது விமர்சனங்களை தாண்டி இந்த தொடரில் ஜெயித்துள்ளார்.
உண்மையில் பாண்டியாவை கடுமையாக விமர்சித்தவர்களில் நானும் ஒருவன். ஏனென்றால் அவர் ஐபிஎல் தொடரில் தவறுகள் செய்தார். ஆனால் அதையெல்லாம் தாண்டி தற்போது டி20 உலக கோப்பையில் மிகப் பெரிய வெற்றியை தேடி கொடுத்துள்ளார். இந்த வெற்றி அவருக்கு மிகவும் ஸ்பெஷல் ஆனது. தன்னுடைய கேரக்டரை வெளியே காண்பித்து இந்த வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க:பாலிவுட் நட்சத்திரங்களை மிஞ்சிய விராட் கோலி.. கிரிக்கெட்டில் மட்டுமல்ல இதுலயும் நான்தான் நம்பர் 1.. முழு விபரம்
பும்ரா மற்றும் ரோஹித் சர்மா போலவே ஒரு போட்டியில் வித்தியாசத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தனது பங்களிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார் என்று கூறியிருக்கிறார். டி20 உலக கோப்பைக்கு முன்பு வரை ஹர்திக் பாண்டியா பணத்துக்காக ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படுகிறார் என்ற பேச்சுக்கள் நிலவியது. ஆனால் அதைத் தாண்டி இந்த உலகக் கோப்பை வென்றதும் அவர் அழுத கண்ணீர் துளிகள் தன்னால் நாட்டுக்காகவும் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை காட்டியுள்ளது.

