19 வயது சிறுவனாக விளையாட ஆரம்பித்தேன்.. எனது ஓய்வு எப்போது என்று கேட்டால்.. பும்ரா சுவாரசியமான பேட்டி

இந்த டி20 உலக கோப்பையில் இந்தியா வெற்றி பெறுவதற்கு வேகப்பந்துவீச்சாளர் பும்ராவின் பங்களிப்பு என்பது மிகப்பெரியதாக உள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் நேற்று நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பும்ரா தனது ஓய்வு குறித்த தகவலை ரசிகர்களுடன் சுவாரசியமாக பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இந்த டி20 உலக கோப்பையில் வேகப்பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு மிக முக்கிய ஒன்றாக அமைந்திருக்கிறது. அதுவும் குறிப்பாக பும்ராவின் பந்துவீச்சு இந்திய அணிக்கு மிகப்பெரிய ஆயுதம். எப்போதெல்லாம் இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு விக்கெட் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் பந்தை பும்ராவிடம் கொடுத்து விடுவார். இந்த டி20 உலக கோப்பை தொடரில் மொத்தமாக 15 விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ரா விக்கெட்டைத் தாண்டி ரன்களை கசியவிடாமல் பாதுகாப்பதில் மிக வல்லவர்.

- Advertisement -

கிட்டத்தட்ட தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஆட்டம் 30 பந்துகளில் 30 ரன்கள் இருந்தபோது இவர் வீசிய 16 மற்றும் 18 வது ஓவர்களில் ஆட்டத்தின் மொமண்டம் முழுவதுமாக மாறியது. இந்த சூழ்நிலையில் நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பேசிய போது பும்ராவிடம் ஏற்கனவே இந்திய ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், அவரது ஓய்வு எப்போது என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த பும்ரா ” எனது ஓய்வை பற்றி கூற வேண்டுமானால் நான் இப்போதுதான் ஆரம்பித்து இருக்கிறேன். எனவே எனது ஓய்வு குறித்த தகவலை தெரிவிக்க இன்னும் நீண்ட காலம் இருக்கிறது. அதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். மும்பை மைதானம் எப்போதுமே எனக்கு ஸ்பெஷலான ஒன்று. நான் 19 வயது சிறுவனாக மும்பை மைதானத்தில் விளையாட ஆரம்பித்தேன். அங்கிருந்து தற்போது வரை இந்த எனது பயணம் எனது வாழ்வில் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

டி20 உலக கோப்பைக்கு நமக்கு அனுபவமான மற்றும் திறமையான அணி கிடைத்தது. ஒவ்வொரு போட்டியிலும் நமது வீரர்கள் அற்புதமாக செயல்பட்டனர் எந்த நேரத்திலும் எதிராலியின் கழுத்தை நெறித்து வெற்றியைப் பறித்து வரக்கூடிய வீரர்கள் நம்மிடம் இருந்தார்கள். அந்த வகையில் நான் மிகவும்அதிர்ஷ்டசாலி. இந்த உலகக் கோப்பைக்கு மிகச் சிறப்பான அணி நம்மிடம் இருந்தது.

இதையும் படிங்க:இறுதிப் போட்டியில் 2 பேர் முக்கியமானவங்க.. போட்டி இந்தியா பக்கம் வந்ததுக்கு காரணமே அவங்க தான்- ரோஹித் பேட்டி

இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே தற்போது எங்களின் முதன்மையான நோக்கம். நாங்கள் இதற்கு முன்னர் இணைந்து இப்படி ஒரு உலகக் கோப்பையை வென்றதில்லை. தற்போது இந்த உலகக் கோப்பை வெற்றி அணி வீரர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் ஒரு மிகப்பெரிய ஒன்றுதலாக அமைந்திருக்கிறது. அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்” என்று பேசி முடித்திருக்கிறார். முன்னணி ஜாம்பவான்கள் ஓய்வு பெற்று விட்ட நிலையில் பும்ராவின் ஓய்வு நீண்ட தூரம் இருக்கிறது என்று அவர் அறிவித்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles