IND vs BAN.. கோலி 74 ரன்.. வெற்றிக்கு 26 ரன் தேவை.. 100 அடித்த விராட்.. கே.எல்.ராகுலுக்கு குவியும் பாராட்டுக்கள்.. இந்தியா அபார வெற்றி .!

இந்தியாவில் நடைபெற்று வருமா 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. இந்தப் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் வைத்து நடைபெற்றது. தாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

- Advertisement -

பங்களாதேஷ் அணியின் துவக்க வீரர்களான லிட்டன் தாஸ் மற்றும் தன்ஷித் ஹசன் இருவரும் அந்த அணிக்கு சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்ந்து நிலையில் தன்ஷித் ஹசன் 43 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹுசைன் சான்டோ 8 ரண்களில் ஆட்டம் இழக்க சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த லிட்டன் தாஸ் 82 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவர்களைத் தொடர்ந்து மெஹந்தி ஹசன் மிராஸ் மூன்று ரன்களில் ஆட்டம் இழக்க தவ்ஹீத் ஹிர்தாய் 18 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து அனுபவ வீரர்களான முகமதுல்லா மற்றும் முஷ்ஃபிக்ர் ரஹீம் ஆகியோர் இணைந்து பங்களாதேஷ் அணிக்கு அதிரடியாக ரன்களை குவித்தனர். பொறுப்புடன் ஆடிக் கொண்டிருந்த முஷ்ஃபிக்ர் ரஹீம் 38 ரண்களில் ஆட்டம் இழக்க மறுமுனையில் அதிரடியாக விளையாடிய மஹ்முதுல்லாஹ் 36 பந்துகளில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவரை அடித்து நசும் அகமது 14 ரன்களில் ஆட்டம் இழந்தார். இறுதியாக முஸ்தபிசுர் ரஹீம் ஒரு ரன்னிலும் சரிஃபுல் இஸ்லாம் 7 ரன்களிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர் . பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் பும்ரா, சிராஜ் மற்றும் ஜடேஜா 2 விக்கெட் வீழ்த்தினர்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் கில் ஆகியோர் மிகச் சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா நாற்பது பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 48 ரன்களில் ஆட்டம் இழக்க மறுமுனையில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கில் 55 பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து விராட் கோலி உடன் ஜோடி சேர்ந்தார் ஸ்ரேயாஸ் ஐயர். இவர்கள் இருவரும் நிதானமாக விளையாடி இந்திய அணியை வெற்றியின் பக்கம் அழைத்துச் சென்றனர். மிகச் சிறப்பாக விளையாடிய விராட் கோலி அரை சதம் எடுத்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 19 ரன்களில் ஆட்டம் இழக்க விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார் கேஎல் ராகுல்.

இவர்கள் இருவரும் மேற்கொண்டு விக்கெட் எதுவும் விழாமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். மிகச் சிறப்பாக விளையாடிய விராட் கோலி இந்தப் போட்டியில் 26 ஆயிரம் சர்வதேச ரன்களைக் கடந்தார். மேலும் குறைவான இன்னிங்ஸில் இந்த சாதனையை புரிந்த வீரர் என்ற பெயரும் பெற்றார். இறுதியாக அணிக்கு ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் சிக்ஸர் அடித்து தன்னுடைய சதத்தையும் பூர்த்தி செய்தார் இது விராட் கோலி ஒரு நாள் போட்டிகளில் எடுக்கும் 48வது சதமாகும். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் ஒரு நாள் போட்டிகளில் எடுத்த அதிக சதங்களான 49 சதங்களை எட்டுவதற்கு இன்னும் ஒரு சதம் மட்டுமே மீதி இருக்கிறது. விராட் கோலி 74 ரன்களில் இருந்தபோது இந்தியாவிற்கு 26 ரன்கள் தேவைப்பட்டது. அனைத்து ஸ்ட்ரைக்கையும் விராட் கோலிக்கு கொடுத்து அவர் சதம் எடுக்க துணை புரிந்தார் கேஎல்.ராகுல். ராகுலின் இந்த செயல் அனைவராலும் பாராட்டப்பட்டது.

- Advertisement -

இந்திய அணி 41.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 261 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது. இந்த வருட உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா பெறும் நான்காவது வெற்றி இதுவாகும். இந்திய அணியின் விராட் கோலி 97 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவருடன் விளையாடிய கேஎல் ராகுல் 34 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் மெஹதி ஹசன் இரண்டு விக்கெட்டுகளும் ஹசன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 8 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது. நியூசிலாந்து அணி இந்திய அணியை விட ரன் ரேட் அதிகம் இருப்பதால் அந்த அணி முதலிடத்தில் உள்ளது. வருகின்ற ஞாயிற்றுக்கிழமை இந்தியா நியூசிலாந்து வீழ்த்தினால் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறும். நாளை நடைபெற இருக்கும் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பெங்களூரில் மோத இருக்கின்றன.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles