டி20 உலக கோப்பை தொடரில் செயிண்ட் லூசியா மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் சூப்பர் 8 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் மிக வேகமாக ரன்களைக் குவித்துக் கொண்டிருக்கிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதன்படி இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். விராட் கோலி ஐந்து பந்துகளை எதிர்கொண்ட நிலையில் ஹேசில்வுட் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார். மறுமுனையில் ரோகித் சர்மா தனது இழந்த பேட்டிங் பார்மை மிகச் சிறப்பாக மீட்டெடுத்தார் என்றுதான் கூற வேண்டும்.
முற்றிலும் தடுப்பாட்டத்தை மறந்த ரோகித் சர்மா அதிரடியாக தனது இன்னிங்சை வெளிப்படுத்தினார். ஒரு ஆஸ்திரேலிய பந்துவீச்சாளரை கூட செட்டில் ஆட விடவில்லை. அந்த அளவிற்கு அனைவரது ஓவர்களிலும் சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாசினார். குறிப்பாக ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை வீசிய ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஆன ஸ்டார்க்கின் பந்து வீச்சில் முதல் இரண்டு பந்துகளையும் சிக்ஸருக்கு விளாசிய ரோஹித், அடுத்த பந்தை பவுண்டரிக்கு விளாசினார்.
திரும்பவும் நான்காவது பந்தை ரோஹித் சர்மா சிக்சருக்கு விளாச, அதன் பிறகு ஓவரின் கடைசி பந்தை திரும்பவும் சிக்சருக்கு விளாசினார். அந்த ஓவரில் மட்டும் இந்திய அணிக்கு 29 ரன்கள் கிடைத்தன. அதன் பிறகு அனைத்து ஓவர்களிலும் சரமாரியாக ரன்களை விளாச, இறுதியாக 41 பந்துகளில் ஏழு பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்களுடன் 92 ரன்கள் விளாசி எதிர்பாராத விதமாக ஸ்டார்க் பந்து வீச்சில் இன்சைடு எட்ஜ் அவுட் ஆகி ஆட்டமிழந்து வெளியேறினார்.
தற்போது இந்திய அணி 12 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. தற்போது சூரியகுமார் யாதவ் மற்றும் சிவம் தூபே ஆகியோர் களத்தில் இருக்கின்றனர். சூரியகுமார் யாதவ் 8 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உடன் 17 ரன்களும், டுபே நான்கு பந்துகளில் நான்கு ரன்களும் குவித்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க:இந்தியாவுக்கு வாய்ப்பு இல்லை.. இது மட்டும் எங்களுக்கு நடந்தா போதும்.. கோப்பை எங்களுக்குத்தான்- ஆஸி வீரர் பேட்டி
இதற்குப் பிறகு மிடில் வரிசையில் ரவீந்திர ராஜா, ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சார் பட்டேல் ஆகியோர் இருப்பதால் இந்திய அணி எப்படியும் 200 ரன்களை கடந்து விடும் என்பது போல் தெரிகிறது. ஆஸ்திரேலியா அணித்தரப்பில் தற்போது வரை ஸ்டார்க், ஹேசில் வுட் மற்றும் ஸ்டாய்னிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருக்கின்றனர்.

