டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 8 போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் தற்போது விளையாடி வருகிறது.
இந்த போட்டியின் மூலம் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ரோகித் சர்மா மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் சாதனையை முந்தி புதிய சாதனை படைத்திருக்கிறார் விராட் கோலி.
ஆன்ட்டிகுவா மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். இந்த முறை ஓரளவு சிறப்பாக தொடங்கிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 39 ரன்கள் குவித்து வெளியேறியது. அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 11 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் என 23 ரன்கள் குவித்து வெளியேறினார்.
அதற்குப் பின்னர் களமிறங்கிய விராட் கோலி மற்றும் ரிஷப் பந்த் ஜோடி வங்கதேச பவுலர்களை நிதானமாகவும் அதே நேரத்தில் ஏதுவான பந்துகளை அதிரடியாகவும் எதிர்கொண்டு விளையாடினர். சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் 24 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர் உடன் 36 ரன்கள் குறித்து வெளியேறினார். அதற்குப் பிறகு களம் இறங்கிய சூரியகுமார் யாதவ் ஆறு ரன்களில் வெளியேறினாலும், அதற்குப் பிறகு களம் இறங்கிய சிவம் துபே 24 பந்துகளில் மூன்று சிக்ஸர்களுடன் 34 ரன்கள் குவித்து வெளியேறினார்.
மிடில் வரிசையில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 27 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் மூன்று சிக்சர்களுடன் 50 ரன்கள் குவித்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. விராட் கோலி 28 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 37 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்ததோடு, மட்டுமல்லாமல் ஒரு புதிய சாதனையையும் படைத்தார். அதாவது வெள்ளை பந்து கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் 3000 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இதையும் படிங்க:நம்பவே முடியல.. முகமது சமி-சானியா மிர்சா திருமணம் செய்து கொண்டார்களா.? உண்மையை விளக்கும் சானியாவின் தந்தை
இவருக்கு அடுத்ததாக ரோகித் சர்மா மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இருக்கிறார்கள்.ஐசிசி உலகக் கோப்பை ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் :
3001* விராட் கோலி
2637 ரோஹித் ஷர்மா
2502 டேவிட் வார்னர்
2278 சச்சின் டெண்டுல்கர்
2193 குமார் சங்ககாரா
3000 ரன்கள் குவித்த விராட் கோலி முதலிடத்திலும், ரோகித் சர்மா இரண்டாவது இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் நான்காவது இடத்திலும் இருக்கின்றனர். வங்கதேச அணி தற்போது தனது அடுத்த இன்னிங்சை களமிறங்கி விளையாடி வருகிறது.

