இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா தனது கணவர் சோயப் மாலிக்கிடமிருந்து விவாகரத்து பெற்ற நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சமி மற்றும் சானியா மிர்சா ஆகியோர் திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.
மேலும் செய்தியோடு ஒரு புகைப்படமும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கும் நிலையில், அது குறித்த உண்மை தன்மையை சானியா மிர்சாவின் தந்தை விளக்கி இருக்கிறார்.
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான முகமது சமி கடந்த வருடம் நடைபெற்ற 50 ஒவ்வொரு உலகக்கோப்பையின்போது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு தற்போது டி20 தொடரில் பங்கு பெறாமல் ஓய்வெடுத்து வருகிறார். மேலும் அவருக்கும், அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். மேலும் அவரது மனைவி ஆதாரமற்ற புகார்கள் சுமத்தி வரும் நிலையில், தற்போது கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
இது போன்றே இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது கணவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயப் மாலிக்கை கடந்த மாதம் விவாகரத்து செய்தார். மாலிக் பாகிஸ்தான் நடிகையான சனா ஜாவீத்தை மூன்றாவதாக திருமணம் செய்ய உள்ள நிலையில், சானியா மிர்சா தற்போது இந்த முடிவு எடுத்திருக்கிறார்.இதனால் தற்போது இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் சமி மற்றும் சானியா மிர்சா ஆகியோர் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வெளிவந்தது. கடந்த 12 ஆம் தேதி இருவரும் திருமண கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படங்களும் வெளிவந்தன. இதனால் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்று அனைவரும் நம்பினர். இது உண்மை என்று சமூக வலைதளங்களில் செய்திகளை பரப்பியும் வந்தனர்.
ஆனால் இது ஏற்கனவே திருமணம் ஆன சோயப் மாலிக் மற்றும் சானியா மிர்சா ஆகியோரின் புகைப்படத்தில் மாலிக் முகத்திற்கு பதிலாக சில விஷக்கிருமிகள் சமியின் புகைப்படத்தை மாற்றி உள்ளதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. இது குறித்து சானியா மிர்ஷாவின் தந்தை அதன் உண்மை தன்மையை கூறி இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்பொழுது “சானியா மிர்சா சமியை இதுவரை நேரில் கூட பார்த்ததில்லை. இந்த வதந்திகள் அனைத்துமே முட்டாள்தனமானது” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:ஒரே ஓவரில் 22 ரன்கள்.. எல்லாம் முடிந்தது என்று நினைத்தேன்.. ஆனால் தோனியின் செயல் என்னை நெகிழ வைத்தது.. கூறுகிறார் அஸ்வின்
இந்த நிலையில் சானியா மிர்சா தனது மகனுடன் தனியாக வாழ்ந்து வருகிறார் என்றும், அவர் தற்போது புனித யாத்திரையாக மெக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. அதனால் இது முற்றிலும் வதந்தியே என்று அவரது தந்தை இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சமியும் தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி அடுத்தடுத்த தொடர்களில் விளையாடுவதற்காக தயாராகி வருகிறார்.

