என்கிட்டயா சவால் விடுற.. உன்ன மாதிரி நான் எத்தனை பேரை பார்த்தவன்.. குர்பாசை தூக்கிய பும்ரா

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் தற்போது இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

- Advertisement -

இந்த போட்டிக்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஷ் இந்திய பந்துவீச்சாளர்கள் குறித்து பேசியது தற்போது ரசிகர்களால் நினைவு கூறப்பட்டு வருகிறது.

- Advertisement -

பார்பர்டஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாசை இழந்த ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீசியது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மூன்று ஓவர்களில் 11 ரன்கள் சேர்த்த நிலையில் ரோஹித் சர்மா அவுட் ஆகி வெளியேறினார். அதற்குப் பின்னர் களம் இறங்கிய பண்ட் ஓரளவு சிறப்பாக விளையாடி 11 பந்துகளில் 20 ரன்கள் குவித்து வெளியேறினார்.

- Advertisement -

பின்னர் விராட் கோலி 24 ரன்கள் குவித்த நிலையில் வெளியேற, மிடில் வரிசையில் களமிறங்க சூரியகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி அணியை கரை சேர்த்தார். 28 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்சர்கள் என 53 ரன்களில் ஆட்டம் இழந்தார். அவருடன் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடிய ஹர்திக் பாண்டியா 24 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது.

பந்துவீச்சில் சிறப்பாக வீசிய ரசித் கான் நான்கு ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதை அடுத்து வெற்றி இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி களம் இறங்கியது. இப்போட்டிக்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் அணி வீரரான குர்பாஸ் பும்ரா மட்டுமல்ல இந்திய அணியின் எந்த பந்துவீச்சாளராக இருந்தாலும் நான் அடித்து விளையாட போகிறேன், பும்ரா மட்டுமே எனது டார்கெட் கிடையாது அனைவருக்கு எதிராகவும் நான் அதிரடியாக ஆடப் போகிறேன் என்று பேசி இருந்தார்.

- Advertisement -

ஆனால் ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் பும்ரா வீசிய முதல் பந்தில் ரன் எதுவும் எடுக்காத நிலையில், இரண்டாவது பந்தை எதிர்கொண்ட குர்பாஸ் விக்கெட் கீப்பர் பண்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். எட்டு பந்துகளில் 11 ரன்கள் குவித்த நிலையில் ஏமாற்றத்துடன் வெளியேறினார். உலகின் மிகத் தரமான பேட்ஸ்மேன்களை கூட தனது அபார பந்துவீச்சால் வீழ்த்தும் பும்ரா, தற்போது இவரையும் வீழ்த்தி தனது தரத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். குர்பாஸ் பேசியதை தற்போது ரசிகர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க:கிளாஸ் ஆட்டம் ஆடிய சூரியகுமார் யாதவ்.. மீண்டும் ஏமாற்றிய ரோஹித் கோலி கூட்டணி.. ரஷீத் கான் சிறப்பான பந்து வீச்சு

தற்போது வரை ஆப்கானிஸ்தானை மூன்று விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் குவித்து விளையாடிகொண்டிருக்கிறது. இதில் பும்ரா மட்டும் இரண்டு ஓவர்களில் ஐந்து ரன்கள் மட்டுமே கொடுத்த நிலையில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இதனால் ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா வசம் வந்து கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணி இப்போட்டியில் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles