6 பந்து 30 ரன்.. ஒரே ஓவரில் ருத்ரதாண்டவம் ஆடிய பில்சால்ட்.. பரிதாபமான ஷெப்பர்ட்.. 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை சூப்பர் 8 போட்டியில் இங்கிலாந்து வீரர் பில் சால்ட்டின் ருத்ரதாண்டவத்தால் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

உலகக்கோப்பையை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த சுற்றின் முதல் போட்டியில் தோல்வியை தழுவி இருக்கிறது.

- Advertisement -

வெஸ்ட் இண்டீசின் செயின்ட் லூசியா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. பிரண்டன் கிங் மற்றும் சார்லஸ் தொடக்க விக்கட்டுக்கு 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க, அதற்குப் பிறகு வந்த நட்சத்திர வீரர்கள் பூரான் நிதானமாக விளையாடி 32 பந்துகளில் 36 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

அதன் பிறகு களம் இறங்கிய அணியின் கேப்டன் ரோமன் போவல் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கி 17 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 36 ரன்கள் குவித்தார். இவரின் அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் அணி 180 ரன்கள் குவித்தது. இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க விக்கெட்டாக ஜாஸ் பட்லர் மற்றும் பில் சால்ட் ஆகியோர் களமிறங்கினர்.

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் ஒரு முனையில் நிதானமாக விளையாட, மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பில் சால்ட் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். பட்லர் அதற்குள் 22 பந்துகளில் 25 ரன்கள் குவித்து வெளியேற, மூன்றாவது வரிசையில் களமிறங்கிய மொயின் அலி 13 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதற்குப் பிறகு பேர்ஸ்டோ மற்றும் பில்சால்ட் ஜோடி ஆட்டத்தை முற்றிலுமாக இங்கிலாந்து வசம் திருப்பியது.

- Advertisement -

இந்த ஜோடி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் அடித்து நொறுக்கினர். பேர்ஸ்டோ 26 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 48 ரன்கள் குவித்தார். இதற்கு சற்றும் சலைக்காமல் விளையாடிய பில் சால்ட் வெஸ்ட் இண்டீஸ் அணியின் குறிப்பிடத்தக்க ஒரு ஓவரில் தனது ருத்ரதாண்டவத்தை காட்டினார்.

இதையும் படிங்க:நாங்க அதை பண்ணும் போது இங்கிலாந்து பயத்துலயே இருந்தாங்க.. ஜஸ்ட் மிஸ்ல தப்பிச்சாங்க.. மேக்ஸ்வெல் சுவாரசிய தகவல்

குறிப்பாக ஆட்டத்தின் 17 வது ஓவரை ரொமாரியா ஷெப்பர்ட் வீச, அதனை எதிர்கொண்ட பில் சால்ட் முதல் பந்தை பவுண்டரிக்கும், இரண்டாவது பந்தை சிக்ஸருக்கும், அடுத்த இரண்டு பந்தை அதேபோல பௌண்டரி மற்றும் சிக்ஸருக்கும், ஐந்தாவது பந்தை பவுண்டரி, கடைசி பந்தை சிக்ஸருக்கும் விளாசி ஒரே ஓவரில் 30 ரன்கள் குவித்து ஆட்டத்தை முழுவதுமாக இங்கிலாந்து பக்கம் திருப்பினார். இதனால் இங்கிலாந்து அணி 17.3 ஓவர்களில் 181 ரன்கள் குவித்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த பில் சால்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார்

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles