டி20 உலக கோப்பையில் தற்போது சூப்பர் 8 போட்டிகள் நடைபெற்று வரும் வேளையில் இதற்கு முன்னர் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதிய போட்டி சுவாரசியமான பக்கங்கள் நிறைந்திருந்தது.
அந்தப் போட்டி நடந்து கொண்டிருந்தபோது இங்கிலாந்தின் நிலை குறித்து ஆஸ்திரேலியா அணி வீரரான மேக்ஸ்வெல் சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
நடப்புச் சாம்பியன் ஆன இங்கிலாந்து அணி இந்த உலக கோப்பையை சற்று தடுமாற்றத்துடனே தொடங்கியது. இக்கட்டான சூழ்நிலையில் இங்கிலாந்து அணி நமீபியா அணியையும், ஆஸ்திரேலியா அணி ஸ்காட்லாந்து அணியையும் வென்றால் மட்டுமே இங்கிலாந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலைமை இருந்தது.
இந்த நிலையில் இங்கிலாந்து நமீபியா அணியை வென்ற நிலையில், முன்னதாக ஆஸ்திரேலியா அணி வீரர் ஹேசில் வுட், டி20 கிரிக்கெட்டில் எங்களுக்கு போட்டி தரக் கூடிய அணி இங்கிலாந்து எனவும், இதனால் இங்கிலாந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற விரும்பவில்லை எனவும், ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் கடைசி வரை ஆட்டத்தை எடுத்துச் சென்று வெற்றி பெற்றால் கூட இங்கிலாந்து அணி தொடரை விட்டு வெளியேறிவிடும் என்றும் ஹேஸில்வுட் கூறி இருந்தார்.
இந்த நிலையில் போட்டியின் போது ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 180 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 30 ரன்கள் குவிப்பதற்குள் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. இந்த சூழ்நிலையில் ஹெட் மற்றும் ஸ்டானிஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தனர். ஆனாலும் கடைசி இக்கட்டான சூழ்நிலையில் டிம் டேவிட் அணியை சிக்சர் அடித்து காப்பாற்றினார்.
இந்த போட்டி குறித்து ஆஸ்திரேலியா அணி வீரர் மேக்ஸ்வெல் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார். இது குறித்து மேக்ஸ்வெல் கூறும்பொழுது ” மூன்று பந்தில் மூன்று ரன்கள் தேவைப்பட்டபோது டேவிட் கொடுத்த அந்த கேட்சை ஸ்காட்லாந்து அணி தவற விட்டதால் போட்டி மாறியது. கடைசி மூன்று பந்தில் என்ன வேண்டுமானாலும் மாறலாம். என்ன நடந்திருக்கும் என்பது யாருக்கு தெரியும். நல்லவேளை நாங்கள் வெற்றி பெற்று விட்டோம். போட்டி நடந்து கொண்டிருந்த போது இங்கிலாந்து அணியினர் பீதியில் இருந்தார்கள்.
இதையும் படிங்க:கோலிய கொஞ்சம் தனியா விடுங்க.. நான் தான் கிங்னு மீண்டும் நிரூபிப்பார்.. முன்னாள் தேர்வு குழு தலைவர் பேட்டி
அவர்கள் விமானத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்வதா? அல்லது கேன்சல் செய்வதா? என்பதை பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்திருக்கும். உண்மையில் அவர்கள் தரப்பில் இருந்து சில மெசேஜ்களும் வந்தது. இந்த போட்டி உண்மையில் மிகவும் வேடிக்கையாக இருந்தது. நாங்கள் இங்கிலாந்தை அடுத்து சுற்றுக்கு செல்ல அனுமதி போவோமா? அல்லது வெளியேற விடுவோமா? என்பதை பார்க்க சுவாரசியமாக இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.

