இந்திய கிரிக்கெட் அணி தற்போது டி20 உலக கோப்பை தொடரில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை நடைபெற்ற லீக் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து தற்போது அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
இந்திய அணி வெற்றி பெற்றாலும் மேட்டிங்கில் சில குறைகள் உள்ளது. குறிப்பாக விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் சற்று கவலைக்குரிய வகையில் இருக்கும் நிலையில், இந்திய முன்னாள் தேர்வு குழு தலைவர் ஸ்ரீகாந்த் விராட் கோலி குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
ஐபிஎல் தொடர் வரை மிகச் சிறந்த பேட்டிங் ஃபார்மை வெளிப்படுத்திக் கொண்டிருந்த விராட் கோலி, டி20 உலகக் கோப்பையிலும் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினார். ஐபிஎல் தொடரை போலவே சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்க வேளையில், அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட ஆசைப்பட்டு மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக விரைவிலேயே ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதுவரை ஐந்து ரன்கள் மட்டுமே குவித்திருக்கும் விராட் கோலியின் பேட்டிங் பார்ம் தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. மேலும் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவதை விடுத்து அவரது பழைய பாணியிலேயே மூன்றாம் வரிசையில் களமிறங்கி விளையாடினால் நல்லது என்று முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.
ஆனால் இது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா என்ன முடிவு செய்யப் போகிறார் என்பது அடுத்து வரப்போகிற போட்டியிலேயே தெரியவரும். இந்த நிலையில் இந்திய முன்னாள் தேர்வு குழு தலைவர் ஆன கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விராட் கோலி குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம், அவரை சிறிது தனியாக விட்டாலே தனது பழைய பேட்டிங் பார்முக்கு திரும்பி விடுவார் என்று மேலும் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இது குறித்து ஸ்ரீகாந்த் விரிவாக கூறும்பொழுது “விராட் கோலியை தற்போது தனியாக விட்டாலே போதுமானது. அவர் அரசனுக்கெல்லாம் அரசர். மீண்டும் விராட் கோலி தனது பழைய பேட்டிங் பார்முக்கு கண்டிப்பாக திரும்புவார். எனவே இது குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். நாளை இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடப் போகிறது. விராட் கோலி இந்த போட்டியில் நிச்சயம் மிகப்பெரிய ரன்கள் குவிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இந்திய அணியின் பந்துவீச்சு குறித்து கூற வேண்டும் என்றால் நான் கேப்டனாக இருந்தால் நிச்சயமாக குல்தீப் யாதவை அடுத்த போட்டிக்கு தேர்வு செய்வேன்.
இதையும் படிங்க:விராட் கோலிய பாருங்க.. அவர் மாதிரி இதை மட்டும் பண்ணுங்க போதும்.. வில்லியம்சனுக்கு அறிவுரை வழங்கிய வாகன்
முகமது சிராஜ் ஒரு நல்ல பந்துவீச்சாளராக இருந்தாலும் குல்தீப் யாதவ் ஒரு மேட்ச் வின்னர் ஆக இருப்பார்” என்று ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார். மேலும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறும் பொழுது “மேற்கிந்திய தீவுகள் மைதானங்களில் 250 ரன்கள் குவிப்பது கடினம். ஆனால் 160 முதல் 170 ரன்கள் வரை குவித்தாலே வெற்றி பெற்று விடலாம். மேலும் விராட் கோலி போன்ற ஒரு தரமான பேட்ஸ்மேன் இந்த ஆடுகளத்திற்கு பொருத்தமாக இருப்பார். அவரது அனுபவம் இந்திய அணிக்கு நிச்சயம் கை கொடுக்கும்” என்று கூறியிருக்கிறார்.

