கேப்டன் பதவியில் இருந்து விலகல்.. வில்லியம்சன் செய்த மற்றொரு காரியம்.. வருத்தத்தில் ரசிகர்கள்

நியூசிலாந்து கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுபவர், கேன் வில்லியம்சன். நியூசிலாந்து கிரிக்கெட்டை பல படிகள் முன்னோக்கி உயர்த்தி இருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் படுதோல்விகளின் காரணமாக தான் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். கேப்டன் பதவியில் இருந்து விலகியதாலும் அவர் எடுத்த மற்றொரு முடிவாலும் ரசிகர்கள் தற்போது வருத்தத்தில் இருக்கின்றனர்.

- Advertisement -

மக்கள் தொகை அளவில் சிறிய பரப்பளவை கொண்ட நாடான நியூசிலாந்து கிரிக்கெட்டில் முன்னணி அணிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. ப்ரன்டன் மெக்கல்லம், ராஸ் டெய்லர், ஸ்டீபன் பிளமிங் போன்ற நட்சத்திர வீரர்கள் நியூசிலாந்து அணிக்காக விளையாடியிருக்கிறார்கள். அவர்களுக்குப் பிறகு 2008 ஆம் ஆண்டில் ஆல்ரவுண்டராக நியூசிலாந்து அணிக்காக அறிமுகமானார் கேன் வில்லியம்சன்.

- Advertisement -

அதன் பிறகு நியூசிலாந்து கிரிக்கெட்காக சிறப்பாக விளையாடி கேப்டன் பொறுப்பை ஏற்ற வில்லியம்சன், தனது அமைதியான அணுகுமுறையால் நியூசிலாந்து மட்டுமின்றி இந்தியாவிலும் அதிக அளவில் ரசிகர்களைக் கொண்டிருக்கிறார். ஒரு கிரிக்கெட் வீரர் தனது நாட்டை தாண்டி மற்ற நாட்டு மக்களாலும் அதிகம் விரும்பப்படக்கூடிய வீரராக இருக்கிறார் என்றால் அது அவரது குணத்திற்காகவே நிச்சயம் இருக்கும். மக்களால் அதிகம் விரும்பப்படக்கூடிய வீரர்களில் ஒருவராக திகழ்கிறார் கேன் வில்லியம்சன்.

2021ஆம் ஆண்டு இவரது தலைமையில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியை வென்று வரலாறு படைத்தது. அதன் பிறகு 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இறுதிப் போட்டி வரை வந்து இங்கிலாந்து அணியிடம் வீழ்ந்தது. மேலும் 2023ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் அரை இறுதி வரையிலும், டி20 உலக கோப்பை தொடரில் 2016 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் அரை இறுதி வரை வந்து அசத்தியிருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் வில்லியம்சன் தலைமையிலேயே களம் இறங்கிய நியூசிலாந்து அணி எதிர்பாராதவிதமாக லீக் போட்டிகளிலேயே தோல்விகளை சந்தித்து தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது. இதன் எதிரொலியாக கேப்டன் வில்லியம்சன் தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க:கம்பீர் இல்லை.. இந்திய அணியின் பயிற்சியாளராக வர வாய்ப்புள்ள மற்றொரு முன்னாள் தமிழக வீரர்

மேலும் அது மட்டுமல்லாமல் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான மத்திய ஒப்பந்த பட்டியலில் இருந்தும் தனது பெயரை விளக்கி இருக்கிறார். அதாவது நியூசிலாந்து வீரர்களுக்கான சம்பள பட்டியலில் இருந்தும் தனது பெயரை விளக்குவதாக அறிவித்திருக்கிறார். ஆனால் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம், வில்லியம்சனுக்கு தங்கள் ஆதரவு தொடர்ந்து இருப்பதாகவும் அவருக்கான கதவுகள் எப்போதும் திறக்கப்பட்டு இருக்கும் என்றும் கூறியிருக்கிறது. வில்லியம்சன் இந்த முடிவால் தற்போது ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles