உலகக்கோப்பை தோல்வி எதிரொலி.. தலைமறைவான 5 பாகிஸ்தான் வீரர்கள்.. முழு விபரம்

நடைபெற்று வருகிற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கலந்து கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, அடுத்த சுற்றுக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றிலேயே வெளியேறியது.

- Advertisement -

இதனால் பாகிஸ்தான் அணியில் ஐந்து முன்னணி வீரர்கள் நாடு திரும்பாமல் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

- Advertisement -

நடப்பு டி20 உலக கோப்பைத் தொடரில் பெரிய எதிர்பார்ப்போடு கலந்து கொண்ட பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் கத்துக்குட்டி அமெரிக்க அணியிடம் தோல்வியடைந்தது. இரண்டாவது போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 119 ரன்கள் இலக்கை கூட சேசிங் செய்ய முடியாமல் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

- Advertisement -

இதனால் ரன் ரேட் மற்றும் பெரிய ரன்கள் வித்தியாசத்தில் இனிவரும் அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்த பாகிஸ்தான் அணி அடுத்த இரண்டு போட்டிகளிலும் சுமாரான வெற்றியை பதிவு செய்தது. இதனால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றிலேயே முன்னணி அணி வெளியேறியதால் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் இந்த தோல்விகளுக்கு காரணம் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் மற்றும் முன்னணி வீரர்கள்தான் என்று பலரும் தங்கள் விமர்சனங்களை கூறி வருகின்றனர். இதனால் ஒட்டுமொத்த வீரர்களையும் பாகிஸ்தான் அணியில் இருந்து தூக்க வேண்டும் என்று முன்னாள் இவர்கள் பலரும் கூறி வருகின்றனர். கடைசி லீக் போட்டி முடிந்தவுடன் பாகிஸ்தான் அணி வீரர்கள் சொந்த நாடு திரும்ப தயாரான நிலையில், இதில் 5 வீரர்கள் மட்டும் பாகிஸ்தான் திரும்ப போவது இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

பாகிஸ்தான் அணியில் சரியாக செயல்படாத பாபர் ஆஸம், இமான் வாசிம், அசாம் கான், சதாப் கான் மற்றும் ஹாரிஸ் ராப் ஆகிய ஐந்து வீரர்களே பாகிஸ்தான் திரும்பாமல் தற்போது அமெரிக்காவிலேயே உள்ளனர். இவர்கள் அனைவருமே லண்டன் சுற்றுலாவுக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் வேறு சில ஊடகங்கள் இவர்கள் ஐந்து பேரும் அமெரிக்காவிலேயே தங்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க:தோனிக்கு இந்தியாவில் எல்லாமே சொந்த மைதானம்தான்.. அவர் உள்ளே நுழையும் போது காதுகள் இருக்காது.. ராணா பேட்டி

ஏனெனில் பாகிஸ்தானுக்குச் சென்றால் எதிர்ப்புகள் கடுமையாக இருக்கும் என்பதோடு மட்டுமல்லாமல், பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் மூலம் விசாரணைகளையும் மேற்கொள்ள வேண்டி வரும். உலகக்கோப்பையின் கடுமையான தோல்வியினால் இவர்களை அணியில் இருந்து மொத்தமாக நீக்குவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. எனவே தற்காலிகமாக இதிலிருந்து தப்பிக்க இவர்கள் அமெரிக்காவிலேயே தஞ்சம் அடைந்திருக்கின்றனர். இனி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த மாதிரியான முடிவுகளை எடுக்கப் போகிறது என்று சில நாட்களில் தெரியவரும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles