விராட் கோலி ஃபார்ம் அவுட்டில் இருப்பது நல்லது தான்.. காரணம் கூறுகிறார் இந்தியாவின் பேட்டிங் பயிற்சியாளர்

டி20 உலக கோப்பையில் இந்திய அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் விராட் கோலியின் பேட்டிங் ஃபாம் அவுட் நல்ல விஷயம்தான் எனவும், அதற்கான காரணத்தையும் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஒன்பதாவது டி20 உலக கோப்பை தற்போது வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணி லீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றில் மோத உள்ளது. அதில் விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் மற்றும் சற்று கவலைக்குரிய விஷயமாக மாறி இருக்கிறது.

- Advertisement -

இந்த டி20 உலக கோப்பை தொடங்குவதற்கு முன்பாகவே விராட் கோலி, ரோஹித் சர்மா உடன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி விளையாட வேண்டும் என்று ஸ்ரீகாந்த், கங்குலி உட்பட இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் கூறினர். இதற்கு காரணம் விராட் கோலி ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தார்.

- Advertisement -

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 700க்கும் அதிகமான ரன்கள் குவித்ததுடன் இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்ததற்கான ஆரஞ்சு தொப்பியையும் இவரை வென்றார். இதனால் இந்த டி20 உலக கோப்பையிலும் களமிறங்கி அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் அவரால் சிறப்பாக ரன்கள் குவிக்க முடியும் என்று இந்திய வீரர்கள் அனைவரும் கருதினர்.

இதற்காகவே ரோஹித் சர்மா இவரை தொடக்க ஆட்டக்காரராகவே களம் இறக்கினார். இதற்காக மிடில் ஆர்டரில் விளையாடிக் கொண்டிருந்த ரிஷப் பண்டை மூன்றாவது இடத்திற்கு மாற்றினார். பண்டிற்கு மூன்றாவது இடம் சரியாக கிளிக் ஆனது. ஆனால் விராட் கோலிக்கு தொடக்க வரிசை செட் ஆகவில்லை. இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் 4,1,0 என்று ஐந்து ரன்கள் மட்டுமே குவித்திருக்கிறார்.

- Advertisement -

இதனால் இவரது பேட்டிங் குறித்து அனைவரும் கவலைப்பட்டு வரும் வேளையில் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் விராட் கோலி தற்போது அதிக பசியுடன் இருக்கிறார் என்றும், விரைவில் அவரிடமிருந்து நல்ல இன்னிங்ஸ் எதிர்பார்க்கலாம் என்றும் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறும் பொழுது “விராட் கோலி தற்போது பார்ம் அவுட்டில் இருப்பது நல்லது. உண்மையில் விராட் கோலி இந்த டி20 உலக கோப்பையில் அதிக பசியுடன் இருக்கிறார்.

இதையும் படிங்க:தொப்பையும் தொந்தியுமாக இருந்த ரோஹித் சர்மா.. ஹிட்மேன் ஆனது எப்படி.? விளக்குகிறார் அபிஷேக் நாயர்

அது இந்திய அணிக்கு மிகவும் நல்லது. அவர் தற்போது நன்றாக விளையாட வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறார். விரைவில் அவரிடமிருந்து பெரிய இன்னிங்ஸ் எதிர்பார்க்கலாம். கடந்த டி20 உலக கோப்பையை போலவே இந்தத் தொடரிலும் இனிவரும் ஆட்டங்களில் விராட் கோலி மிகச் சிறப்பாக ரன்கள் குவிக்கப் போகிறார்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles