தற்போது பரபரப்பாக டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இரண்டு நாடுகளில் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் தற்போது சூப்பர் 8 போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் நடைபெற உள்ளன.
முன்னாள் சாம்பியன் ஆன இந்திய அணி லீக் சுற்றில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றதை அடுத்து சூப்பர் 8 சுற்றில் பங்கேற்க இருக்கிறது. இந்த நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா குறித்து சஞ்சய் மஞ்சுரேக்கர் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
அமெரிக்காவில் நடைபெற்ற லீக் போட்டிகளில் இந்திய அணி மூன்று போட்டிகளில் பந்து வீச்சை வைத்து வெற்றி கண்டது. இருப்பினும் ரிசப் பண்ட் மற்றும் சூரியகுமார் யாதவ் போன்ற இளம் வீரர்கள் பேட்டிங்கில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தனர். ஆனால் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் பேட்டில் இருந்து இன்னும் பெரிய இன்னிங்ஸ் வரவில்லை.
ரோகித் சர்மா ஒரு போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார். ஆனால் அதற்குப் பிறகு அவரிடம் இருந்தும் பெரிய இன்னிங்சை எதிர்பார்க்க முடியவில்லை. குறிப்பாக மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான விராட் கோலி இதுவரை 3 போட்டிகளில் களமிறங்கி வெறும் ஐந்து ரன்கள் மட்டுமே குவித்திருக்கிறார். இதனால் அடுத்த சுற்றில் இவர்களது பேட்டிங் பொறுத்தே இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சுரேகர் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறும் பொழுது
“விராட் கோலி ரோஹித் சர்மா இருவர் குறித்து கேட்கிறீர்கள். பொதுவாக உலகக் கோப்பை தொடரில் அனுபவம் மிக்க வீரர்கள் அசத்துவார்கள். எனவே தற்போது இந்த இருவரும் பார்மில் இல்லை என்றாலும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
ஏனென்றால் இவர்கள் இருவரது பேட்டிங் தரம் குறித்து நம் அனைவருக்கும் தெரியும். இவர்கள் முக்கியமான போட்டிகளில் இவர்களது பேட்டிங் தரம் வெளியே வரும். இருப்பினும் நாக் அவுட், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி போன்ற பெரிய போட்டிகளில் இவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடிய வெற்றிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும். அதைத்தான் சீனியர் வீரர்களிடமிருந்து எதிர்பார்க்கக் கூடிய ஒன்று.
இதையும் படிங்க:வெளிய போனாலும் கெத்துதான்.. எம் எஸ் தோனி சாதனையை முறியடித்த பாபர் ஆசம்
குறிப்பாக 1992ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய இன்சமாம் போன்ற இளம் வீரர்கள் இந்திய அணியில் சிறப்பாக பங்காற்றினால் அது போனஸ். இருப்பினும் சீனியர் வீரர்கள் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகிறது. இந்த உலகக் கோப்பை தொடர் முடிந்ததும் ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் தங்களது ஓய்வு பெறும் திட்டம் பற்றி தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் தேர்வுக்கு குழுவினர் அது குறித்து முடிவெடுப்பார்கள்” என்று கூறி இருக்கிறார்.

