ரோஹித், கோலி இல்லை.. இவர்தான் ரியல் இன்ஸ்பிரேஷன்.. இந்திய வீரரை பாராட்டும் பதான்

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வந்த நிலையில் லீக் போட்டிகள் அங்கு நிறைவடைந்துள்ளன.

- Advertisement -

இதற்குப் பிறகு சூப்பர் 8, அரையிறுதி, இறுதிப்போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் நடைபெறுகின்றன. இந்திய அணிக்கு லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த நிலையில் இந்திய அணி வீரர் இர்பான் பதான் ரிஷப் பண்ட் குறித்து முக்கிய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியை பொறுத்தவரையில் பந்துவீச்சில் மிக அபாரமாக செயல்பட்டது. ஆனால் பேட்டிங்கில் ஒரு சில வீரர்களை தவிர மற்ற வீரர்கள் யாருக்கும் இன்னும் சரியாக பேட்டிங் கிளிக் ஆகவில்லை. இதில் குறிப்பாக ரிஷப் பண்ட் மட்டுமே பேட்டிங்கில் தொடர்ந்து ஜொலித்துக் கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட 16 மாதங்கள் கிரிக்கெட் விளையாடாத நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக களம் இறங்கி விளையாடினார்.

- Advertisement -

தொடக்கத்தில் சில தடுமாற்றங்களை சந்தித்தாலும், அதன் பிறகு தன் பழைய பார்மை மீட்டெடுத்து சிறப்பாக விளையாடினார். இவரது பார்ம் காரணமாகவே இந்திய கிரிக்கெட் வாரியம் இவருக்கு டி20 உலக கோப்பையிலும் இடம் கொடுத்தது. வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்த பண்ட் அதற்குப் பின்னர் நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறார்.

இனி வரும் போட்டியிலும் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்காக பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு டி20 உலக கோப்பையை வெல்ல மிக முக்கிய காரணமாக அமைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணி முன்னாள் ஆல் ரவுண்டரான இர்ஃபான் பதான் ரிஷப் பண்ட் குறித்து பாராட்டி பேசி இருக்கிறார். அதில் ரிஷப் பண்ட் உண்மையான இன்ஸ்பிரேஷன் என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

ரிஷப் பண்ட் குறித்து இர்பான் பதான் கூறும் பொழுது “ரிஷப் பண்ட் நிஜமாகவே ஒரு இன்ஸ்பிரேஷன் ஆன பிளேயர். காயத்திலிருந்து தன்னை மீட்டெடுத்து தற்போது அவர் விளையாடும் விதம் உண்மையிலேயே அபாரமாக இருக்கிறது. இதுபோன்ற சிறந்த கம்பேக் வேறு எந்த வீரராலும் தர முடியுமா? என்பது எனக்கு தெரியவில்லை. பண்ட் உண்மையிலேயே ஒரு சாம்பியன் வீரர்” என்று புகழாரம் சூட்டி இருக்கிறார்.

இதையும் படிங்க:இந்தியா திரும்பிய கில்.. ஒழுங்கு நடவடிக்கைதான் காரணமா.? அவரே வெளியிட்ட பதிவு

பண்ட் தற்போது இந்த தொடரில் விராட் கோலிக்கு பதிலாக மூன்றாம் இடத்தில் களமிறங்கி மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். இவரது பேட்டிங் ஃபார்ம் இப்படியே தொடரும் பட்சத்தில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரராகவும் வர வாய்ப்பு இருக்கிறது. பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்திலேயே சிறப்பாக விளையாடிய பண்ட் இனி வரும் ஆடுகளங்கள் பேட்டிங்க்கும் சாதகமாக இருக்கும் என்பதால் இவரிடம் இருந்து பெரிய ரன்கள் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles