ஒன்பதாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது சூப்பர் 8 சுற்று கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்தத் தொடர் முழுவதும் தற்போது வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் நடைபெற இருக்கின்றன.
இந்த சுற்றுக்கு அமெரிக்கா, இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியில் ரிசர்வ் வீரர்களாக ரிங்குசிங்,கில், ஆவேஷ் கான், கலீல் அகமது உள்ளிட்ட நான்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கில்லை தவிர மற்ற மூன்று வீரர்களும் இந்திய அணியினரோடு சேர்ந்து பயிற்சி பெறும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் என அவ்வப்போது வெளிவந்தது. ஆனால் கில் பயிற்சி பெறும் புகைப்படங்கள் என எதுவும் இணையதளங்களில் வெளியாகவில்லை.
இது குறித்து வெளிவந்துள்ள தகவலின் படி கில் தனது சொந்த வேலைகளையும், வணிக ரீதியான வேலைகளையும் அமெரிக்காவில் பார்த்து வந்ததாகவும், இந்திய அணியினரோடு இணையாததால் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக இவரை இந்தியா அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறும் பொழுது
“அமெரிக்காவில் முதல் சுற்றில் விளையாடும் போது நான்கு வீரர்கள் தேவைப்பட்டதாகவும் தற்போது அடுத்த சுற்றுக்கு இந்திய அணி சென்றுள்ளதால் இரண்டு வீரர்கள் மட்டுமே போதும் என்று முடிவு செய்யப்பட்டதால் கில் மற்றும் ஆவேஸ் கான் ஆகியோரை இந்தியா திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி இருக்கிறார். இது குறித்து விளக்கம் அளித்து இருந்தாலும் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
இந்த சூழ்நிலையில் தற்போது கில் தனது சமூக வலைதளத்தில் ரோகித் சர்மா மற்றும் அவரது மகளோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “நானும் ஷாமியும் ரோகித் சர்மாவிடமிருந்து ஒழுக்கங்களை கற்றுக் கொள்கிறோம் ” என்ற பதிவிட்டு இருக்கிறார். ஒழுங்கு நடவடிக்கை காரணமாகவே கில் இந்தியா திருப்பி அனுப்பப்படுகிறார் என்ற தகவல் வெளியான நிலையில் இவரின் இப்படி ஒரு பதிவு தற்போது சர்ச்சையை தூண்டியுள்ளது.
இதையும் படிங்க:விராட் கோலியை விட என் தம்பி சிறந்தவர்.. ஆனால் பாகிஸ்தான் அணி இவரை தேர்வு செய்யவில்லை.. உமர் அக்மல் சர்ச்சை பேச்சு
உண்மையாகவே இரண்டு வீரர்கள் போதும் என்ற மனநிலையில் இந்திய நிர்வாகம் எப்படி ஒரு முடிவை எடுத்ததா? அல்லது கில் நெஜமாகவே ஒழுங்கு நடவடிக்கை காரணமாக திருப்பி அனுப்பப்படுகிறாரா? என்பது குறித்த உறுதியான தகவல் இன்னும் வெளிவரவில்லை. ஒரு முக்கியமான சுற்றை இந்திய அணி தற்போது விளையாடவிருக்கும் நிலையில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் தற்போது அணியை விட்டு வெளியேற இருப்பது இந்திய அணிக்கு சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. எது எப்படி இருப்பினும் இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்
Shubman Gill ending the rumours with his Instagram story. ❤️🇮🇳 pic.twitter.com/w92J5ufIt0
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 16, 2024

