டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மோசமான தோல்விகளை சந்தித்து லீக் சுற்றிலேயே தற்போது வெளியேறி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மல் விராட் கோலியை விட அவரது சகோதரரான உமர் அக்மரல் சிறந்தவர் என்று சர்ச்சையான கருத்தை கூறி இருக்கிறார்.
இந்த உலகக் கோப்பை டி20 தொடர் தொடங்குவதற்கு முன்பாக பாகிஸ்தான் அணியின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தன. ஏனென்றால் பாகிஸ்தானில் கிரிக்கெட் நிர்வாகத்தில் இருந்து பயிற்சியாளர், கேப்டன் என அனைத்திலும் மாற்றம் செய்து, மேலும் சிறப்பு பயிற்சிகளையும் மேற்கொண்டு பாகிஸ்தான் அணி இந்த உலக கோப்பைக்கு மிக அதிரடியாக தயாராகி வந்தது.
அதற்கு அப்படியே நேர்மாறாக உலகக்கோப்பையில் கத்துக்குட்டி அணியிடம் தோல்வி அடைந்தது மட்டுமல்லாமல், இந்திய அணி நிர்ணயித்த 119 ரன்கள் இலக்கை கூட அடைய முடியாமல் தோல்வியடைந்து சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இதற்கு காரணம் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம் தனக்க விருப்பமான வீரர்களை மட்டுமே தேர்வு செய்தார் என்றும் மேலும் அவரது மோசமான கேப்டன்சிப் காரணமாகவும் பாகிஸ்தான் தோல்வியை தழுவியது என்று ஒரு தரப்பு கூறுகிறது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியில் தரமான வீரர்களை தேர்வு செய்யாமல் தனக்கு விருப்பமான வீரர்களை தேர்வு செய்வதே அணியின் தோல்விக்கு காரணம் என்றும், விராட் கோலியை விட உமர் அக்மல் சிறந்தவர் என்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது
“பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் தற்போது பேவரிஸம் நடக்கிறது. எனது சகோதரர் சிறப்பாக விளையாடியும் பாகிஸ்தான் அணியில் தேர்வாகவில்லை. இது எனக்கு வருத்தமாக உள்ளது. உமர் அக்மல் குறித்து நான் சில கருத்துக்களை தெரிவிக்க விரும்புகிறேன். எனது சகோதரர் விராட் கோலி அளவுக்கு சிறந்து விளங்கவில்லை என்றாலும் அதிக ஸ்ட்ரைக் ரேட் மற்றும் தனி நபர் அதிகபட்சம் என அனைத்துமே உமர் அக்மலிடம் இருக்கிறது.
இதையும் படிங்க:தோனி மட்டும் இல்லையென்றால் சச்சின் வருத்தத்துடன் விடை பெற்று இருப்பார்.. கனடா வீரர் ஜான்சன் பேட்டி
கம்ரான் அக்மாலின் இந்த கருத்து தற்போது ரசிகர்களுடைய சர்ச்சையை கிளப்பி வருகிறது. விராட் கோலி 3 வடிவ கிரிக்கெட்டிலும் மிகச் சிறந்தவர் என்றும், உமர் அக்மல் ஏதோ ஒரு காலத்தில் சிறப்பாக விளையாடினார் என்பதற்காக அவரை விராட் கோலியுடன் எல்லாம் கம்பேர் செய்து பார்க்க கூடாது என்று அவரது ரசிகர்கள் கம்ரான் அக்மலின் கருத்துக்கு பதில் அடி கொடுத்து வருகின்றனர்.

