டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் முன்னாள் சாம்பியன் ஆன பாகிஸ்தான் அணி இந்த முறை சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றோடு வெளியேறி இருக்கிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் இந்த வீரரை இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற முன்னணி நாடுகள் கூட எடுக்காது என்று மைக்கேல் வாகன் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்த டி20 உலக கோப்பை தொடரில் கத்துக்குட்டியான அமெரிக்கா அணியிடம் சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. மேலும் இரண்டாவது போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 119 ரன்கள் இலக்கை கூட கடக்க முடியாமல் 113 ரன்கள் மட்டுமே குவித்து ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
லீக் சுற்றில் தொடக்கத்திலேயே இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியதால் ரன் ரேட் மற்றும் வெற்றிகளின் அடிப்படையில் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலைமையில் கனடா அணியிடம் குறைந்த ரன்கள் இலக்கை கூட கடைசியிலேயே வந்து வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் தற்போது லீக் சுற்றோடு பாகிஸ்தான் அணி வெளியேறும் நிலைமைக்கு வந்திருக்கிறது.
பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை பந்துவீச்சு மிகப் பலமாக இருந்தாலும், அந்த அணியின் பேட்டிங் வரிசை வலுவிழந்ததாக காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில் அணியின் கேப்டன் பாபர் ஆசமை மற்ற நாட்டு அணிகள் கண்டிப்பாக எடுக்காது என்று மைக்கேல் வாகன் விமர்சனம் செய்திருக்கிறார் இது குறித்து வாகன் விரிவாக கூறும்பொழுது
“பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அமெரிக்கா மற்றும் இந்திய அணிகளிடம் வெற்றி பெற்று இருக்க வேண்டும்.
அந்த இரண்டு அணிகளை வீழ்த்தி இருந்தால் பாகிஸ்தான் அணி இந்நேரம் சூப்பர் 8 சுற்றில் இருந்திருக்கும். பாகிஸ்தான் அணி ஒருவேளை இந்த டி20 உலக கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு வந்திருந்தால் கூட அவர்களை சிறந்த வெள்ளை பந்து அணியாக நான் கருத மாட்டேன். டி20 கிரிக்கெட்டில் அசத்துவதற்கு தேவையான தகுதிகள் பாகிஸ்தான் அணியிடம் இருப்பதாக நான் உணரவில்லை.
இதையும் படிங்க:பும்ராவுக்கு ஒரு சான்ஸ் கொடுத்த மாதிரி இவருக்கும் குடுங்க.. நல்லா வருவாரு.. கவாஸ்கர் பேட்டி
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அந்த அணியில் டி20 கிரிக்கெட் விளையாடுவதற்கு தகுந்த வீரர்கள் இல்லை. பாபர் ஆஸம் சிறந்த வீரர்தான். இருப்பினும் அவர் இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் டி20 அணியில் இடம் பிடிப்பாரா? என்றால் இல்லை. மேலும் இந்திய அணி எப்படி வீழ்த்த வேண்டும் என்ற திட்டமும் பாகிஸ்தான் அணியிடம் இல்லை. அவர்கள் சேஸ் செய்யும் போதே நிலைமை என்னவென்று தெரிந்து இருக்கும். இந்தியாவிடம் பாகிஸ்தானை வீழ்த்துவதற்கான திட்டம் அவர்களுக்கு தெரியும். ஆனால் பாகிஸ்தானில் அது போன்ற திறமை இல்லை என்று கூறி இருக்கிறார்.

