உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.
இந்த நிலையில் பந்துவீச்சில் கலக்கி வரும் அர்ஸ்தீப் சிங்குக்கு ஒரு குறிப்பிட்ட வடிவ கிரிக்கெட்டில் பும்ரா போல வர வாய்ப்பிருப்பதாக இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பந்துவீச்சில் இந்திய அணி மிக பலம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதற்குக் காரணம் முஹமது சிராஜ், அர்ஸ்தீப் சிங் மற்றும் பும்ரா ஆகிய வேகப்பந்து வீச்சு கூட்டணி எதிரணி பேட்ஸ்மேன்களை அவ்வளவு எளிதாக இரண்டு குவிக்க விடுவதில்லை. மேலும் இவர்களுடன் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் இணைந்து இருப்பதால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு என்பது மிகவும் எளிதாகி விடுகிறது.
மேலும் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பஞ்சாப் வீரர் அர்ஸ்தீப் சிங் மிக முக்கிய வீரராக கவனம் பெற்று இருக்கிறார். குறிப்பாக இவரது ஸ்விங் பந்துவீச்சில் விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தி விடுகிறார். கடந்த அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டும் இல்லாமல், மொத்தமாக அந்த போட்டியில் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற மிக முக்கிய காரணமாக அமைந்தார்.
இதனால் ஹர்ஸ்தீப் சிங்குக்கு வெள்ளை நிறப் பந்து கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் சிவப்பு பந்திலும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது
“கடினமான லெந்த் பந்துகளை வீச நினைக்கும் அவர், வலது கை பேட்ஸ்மேன்களுக்கு அவர்கள் பக்கமாகவும், இடது கை பேட்ஸ்மேன்களுக்கு வெளியே இழுத்தும் வீசுகிறார்.
யார்க்கர் பந்துகளை அதிகமாக வீச இவர் முயற்சிப்பதில்லை. சரியான லைன் அண்ட் லென்தில் வீச முயல்கிறார். இந்த இரண்டு வகையான பந்துகளை வீசுவது மிகவும் சிறப்பானது. டி20 கிரிக்கெட்டிலேயே பந்தை அதிகளவு ஸ்விங் செய்யும் இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு பெற்றால் எந்தளவு ஸ்விங் செய்பார் என்பது நினைத்துப் பார்க்கவே ஆச்சரியமாக உள்ளது. எனவே பும்ராவிற்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது போல இவருக்கும் வாய்ப்பு கொடுத்தால் மிகச் சிறப்பான வீரராக எதிர்காலத்தில் வருவார்.
இதையும் படிங்க:அவ்வளவு மோசமாக நாங்கள் விளையாட மாட்டோம்.. எல்லா அணிகளும் எங்களுக்கு ஒன்றுதான்.. விளக்கம் கொடுத்த பேட் கம்மின்ஸ்
இதனால் இனிவரும் காலங்களில் இவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார். 2022 ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணியில் குறுகிய வடிவத்தொடர்களில் விளையாடி வரும் அர்சுதீப் சிங்குக்கு இனிவரும் காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

