அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் ஏற்கனவே தகுதி பெற்று விட்டன. இந்த சூழ்நிலையில் மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் முன்னணி அணியான இங்கிலாந்து சூப்பர் 8 சுற்று தகுதி பெற வேண்டுமானால் நமீபியா அணியை வீழ்த்துவது மட்டுமில்லாமல் ஆஸ்திரேலியா அணி ஸ்காட்லாந்து அணியை வீழ்த்த வேண்டும். இவை நடந்தால் மட்டுமே இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணி வீரரான ஹாஸில்வுட் இங்கிலாந்து அணி டி20 கிரிக்கெட்டில் மிகவும் வலிமையான அணி என்றும், அந்த அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா அணி தடுமாறுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதன் மூலம் அவர் இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறக் கூடாது என்பதை மறைமுகமாக குறிப்பிடுகிறார். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணியை ஸ்காட்லாந்து அணியிடம் தோல்வி அடையும் என்று ஒரு தரப்பு கூறுகிறது. அவரது கருத்து தற்போது பேசும் பொருளாக மாறி உள்ள நிலையில் மற்றொரு ஆஸ்திரேலிய அணி வீரரான கம்மின்ஸ் இதற்கான முழு விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார்.
இதுகுறித்து கம்மின்ஸ் கூறும் பொழுது
“ஹெசில்வுட் கூறியதற்கு பிறகு நானே இது குறித்து அவரிடம் கேட்டறிந்தேன். ஆனால் இதை அவர் நகைச்சுவையாகவே கூறியிருக்கிறார். எங்களுக்கு சிறிய அணி, பெரிய அணி என்கிற பாகுபாடெல்லாம் கிடையாது.
நாங்கள் அனைத்து அணிகளையும் ஒரே மாதிரியாகவே பார்க்கிறோம். களத்தில் நாங்கள் ஒரே மாதிரியான அணுகுமுறையை வெளிப்படுத்துவோம்.
எந்த அணி வந்தாலும் ஆஸ்திரேலியா அணி தங்களது சவாலை வெளிப்படுத்தும். எங்களுக்கு எந்த அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றாலும் பிரச்சனை கிடையாது” என்று கூறி இந்த பிரச்சனைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். கம்மின்சின் இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:சச்சின், ராவிட்டுக்குத் தெரிந்த மரியாதை இவருக்கு தெரியாது.. ஏன் இப்படி பேசுகிறார் என்று புரியவில்லை.. இம்ருல் கேயஸ் விமர்சனம்
இந்திய அணி தனது முதல் சூப்பர் 8 போட்டியில் ஆஸ்திரேலியா அணியுடன் மோத உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணி இடம் தோல்வியடைந்ததை அடுத்து இப்போட்டியில் இந்திய அணி அதற்கு பழி வாங்க முயற்சிக்கும். இதனால் இந்த போட்டி ரசிகர்களுக்கு பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

