இந்திய மக்களால் அதிகம் நேசிக்கப்படும் வீரரான மகேந்திர சிங் தோனி தற்போது காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வெடுத்து வருகிறார். அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் தோனி களமிறங்குவாரா? என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.
சமீபத்தில் இந்திய ரசிகர்கள் குறிதது பேட்டி அளித்த தோனி மக்கள் தன்னை அதிகம் நேசிக்கப்படுவதற்கான காரணத்தையும், அதனால் தன்னை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்றும் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களால் ‘தல தோனி’ என்று செல்லமாக அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்தாலும் அவர் சென்னை வீரராகவே கருதப்படுகிறார். அந்த அளவிற்கு சென்னை மக்களுக்கு தோனி மிக நெருக்கமாகி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல தோனியும் சென்னை மக்களின் மீது அதிக அளவு அன்பு வைத்துள்ளனர்.
அவரே ஒரு பேட்டியில் வெளிப்படையாக சென்னை மக்கள் மிகவும் அறிவானவர்கள் என்றும் கூறியிருக்கிறார். மேலும் தோனி கேப்டனாக இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐந்து முறை ஐபிஎல் கோப்பைகளை வென்று சாதனையும் படைத்திருக்கிறார். இதனால் 2023ஆம் ஆண்டு அவரது முழங்காலில் காயம் ஏற்பட்டாலும், அந்த காயத்துடனே முழு சீசன் விளையாடினார். மேலும் ரசிகர்களுக்காக இன்னும் ஒரு சீசன் விளையாடப் போகிறேன் என்றும் கூறினார்.
சொன்னது போலவே தோனி இந்த சீசனும் முழுவதுமாக விளையாடினாலும், எதிர்பாராத விதமாக இந்த ஆண்டும் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வு எடுத்தவரும் மகேந்திர சிங் தோனி அடுத்த ஆண்டு விளையாடுவாரா? அல்லது ஓய்வு பெற்று விடுவாரா? என்பது அவரது கையில் மட்டுமே இருக்கிறது. ஆனால் ரசிகர்கள் தோனி இன்னும் ஒரு சீசன் தங்களுக்காக விளையாட வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் மகேந்திர சிங் தோனி ரசிகர்கள் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது
“ரசிகர்கள் நான் யார் என்பதற்காக என்னை நேசிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். எந்த பந்தாவும் இல்லாமல் நான் நானாக இருப்பது என்னுள் அவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. நான் விளையாடும் கிரிக்கெட்டை ஸ்டேடியத்தில் உள்ள அனைவரும் அவர்களாலும் விளையாட முடியும் என்று நினைக்கிறார்கள். ஏனென்றால் நான் மரபு வழி கிரிக்கிட்டையோ அல்லது நுணுக்கமான ஷாட்களையோ எதுவும் விளையாடவில்லை.
இதையும் படிங்க:பெஞ்சிலேயே உட்கார வைக்கப்பட்டிருக்கும் 3 வீரர்கள்.. நாளையாவது வாய்ப்பு தருவாரா ரோகித் சர்மா? உத்தேச பிளேயிங் லெவன்
அதனால்தான் மற்றவர்களை விட என்னுடன் அதிகம் பழக முடியும் என்று நினைக்கிறார்கள். மேலும் இயல்பாகவே இப்படி இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது. எதையும் மாற்றிக் கொள்ள நான் விரும்பவில்லை.நான் இல்லாத வகையில் புதிதாக என்னை வெளிப்படுத்த விரும்பவில்லை” என்று தோனி கூறி இருக்கிறார்.

