டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை கனடா அணியை அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் எதிர்கொள்ள உள்ளது.
இதற்கு முன்னர் நடைபெற்ற மூன்று போட்டிகள் நியூயார்க் மைதானத்தில் நடைபெற்றதால், அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வேகப்பந்துவீச்சை மையமாகக் கொண்ட ஒரு அணியை களம் இறக்கி அதில் வெற்றிகளையும் கண்டார்.
பும்ரா, ஹர்ஸ்தீப் சிங், முகமது சிராஜ் என்று வேகப்பந்து கூட்டணியை வைத்து எதிரணிகளுக்கு அழுத்தத்தை கொடுத்தார். தற்போது லீக் போட்டிகள் நியூயார்க் மைதானத்தில் நிறைவடைந்துள்ள நிலையில், நாளை கடைசி லீக் போட்டி அமெரிக்காவில் ப்ளோரிடா மாகாணத்தில் நடைபெற உள்ளது. இதை அடுத்து சூப்பர் 8 போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் நடைபெற உள்ளதால் அங்கே சுழற் பந்து வீச்சு முக்கிய பங்கு வகிக்கும்.
இதனால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்பாக ஒரு டச் கொண்டுவர சுழற் பந்துவீச்சாளர்களுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜை வெளியில் வைத்து குல்தீப் யாதவை அணிக்குள் கொண்டு வரலாம். மேலும் ஏழு பேட்ஸ்மேன்களை மட்டுமே வைத்துக் கொண்டு ஜடேஜா அல்லது அக்சர் பட்டேல் இடத்தில் சகாலை விளையாட வைக்கலாம்.
இதே போல பேட்டிங்கில் ஏழாவது ஆப்சனாக இருக்கும் சிவம் தூபேவிற்கு தற்காலிக ஓய்வு கொடுத்து விட்டு இதுவரை வாய்ப்பு கிடைக்காத சஞ்சு சாம்சன் இந்த போட்டியில் வாய்ப்பு பெறுவார் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் இதற்கான வாய்ப்புகள் குறைவுதான் என்று பார்க்கப்படுகிறது. ஆனால் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் விளையாட நிச்சயம் வாய்ப்பு இல்லை.
விராட் கோலி பேட்டிங்கில் இன்னமும் பார்முக்கு வராததால் அவர் கனடா அணிக்கு எதிரான போட்டியில் தொடக்க வேட்டக்காரராக களம் இறங்கி தனது பேட்டிங் பார்மை மீட்டெடுக்க முயற்சிப்பார். இதனால் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை உள்ளே அழைத்து சஞ்சு சம்சனுக்கு வேண்டுமானால் தற்காலிகமாக ஒரு வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றபடி பும்ரா மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோர் கட்டாயமாக களமிறங்குவார்கள். பேட்டிங்கை பொறுத்த வரை விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராகவும், ரிஷப் அண்ட் மூன்றாம் வரிசையிலுமே தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
இதையும் படிங்க:மலிங்கா, மெக்ராத் வரிசையில்.. இப்படி ஒரு பிளேயர் இந்தியாவுக்கு கிடைப்பார்னு நான் கனவிலும் கூட நினைக்கல.. ரவி சாஸ்திரி பெருமிதம்
கனடா அணிக்கு எதிராக நாளை விளையாடப் போகும் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் :
ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன்,ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல்,ரவீந்திர ஜடேஜா, அர்ஸ்தீப் சிங், குல்தீப் யாதவ், மற்றும் பும்ரா.

