கண்ணீர் விடும்போது ஆறுதல் படுத்தும் மனசு இருக்கே.. அதுதான் சார் கடவுள்.. ரோஹித் சர்மாவை பாராட்டும் ரசிகர்கள்

நியூயார்க்கில் நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி வீரர் களத்தை விட்டு வெளியேறிய போது ரோஹித் சர்மா செய்த சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ராப் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். இந்திய அணி தரப்பில் பண்ட் மட்டுமே சிறப்பாக விளையாடி 31 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் குவித்து 42 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இதற்குப் பின்னர் பாகிஸ்தான் அணி களம் இறங்கி விளையாடியது 10 ஓவர்களில் 57 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்ற நிலையில் இருந்த பாகிஸ்தான் அணியை அதற்குப் பிறகு இந்திய பந்துவீச்சாளர்கள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். பந்துகளை வீணடித்த பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் இறுதியில் அதிரடியாக விளையாட முயன்றும் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 113 ரன்களே அவர்களால் எடுக்க முடிந்தது.

முக்கியமாக ஆட்டத்தின் இறுதி ஓவரில் நசீம் ஷா களத்தில் விளையாட வந்தார். கடைசி மூன்று பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தொடர்ந்து இரண்டு பந்துகளை நசீம் ஷா பவுண்டரிக்கு விளாசினார். இதனால் இறுதியில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவ, அந்த தோல்வி கொடுத்த சோகத்தில் களத்திலேயே நசிம் ஷா கண்ணீர் விட்டு அழுதார். அப்போது ரோஹித் சர்மா அவரை ஆறுதல் படுத்தும் விதமாக அவரது தோளில் தட்டிக் கொடுத்து ‘நீ கடைசிவரை சிறப்பாக பேட்டிங் செய்தாய்’ என்று கூறுவது போல ஆறுதல் படுத்தி விட்டு சென்றார்.

- Advertisement -

எதிரணி வீரராக இருந்தாலும் ஒருவர் வருத்தப்படும் போது அவரை ஆறுதல் படுத்திய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை தற்போது ரசிகர்கள் மிகவும் பாராட்டி வருகின்றனர். சிக்கனமாக பந்து வீசி மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றிய பும்ரா ஆட்டநாயகன் விருதை பெற்றார். மேலும் இப்போோட்டியில் மூன்று முக்கிய கேட்சுகளை பிடித்த ரிஷப் பண்டுக்கு ரவி சாஸ்திரியிடமிருந்து சிறந்த பீல்டருக்கான விருது கொடுக்கப்பட்டது.

இதையும் படிங்க:அவங்களால முடியும்போது ஏன் நம்மளால முடியாது.. என் டீம்கிட்ட நான் சொன்னது இது தான்.. வெற்றிக்குப் பின்னர் ரோஹித் சர்மா பேட்டி

இந்திய அணி தற்போது பெற்ற இரண்டாவது வெற்றி இதுவாகும். அடுத்ததாக வருகிற 19ஆம் தேதி அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இதே நியூயார்க் மைதானத்தில் மோத உள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தான் அணிக்கு இது இரண்டாவது மோசமான தோல்வியாகும். முதல் போட்டியில் அமெரிக்க அணிக்கு எதிரான அடைந்த தோல்வி தற்போது இரண்டாவது போட்டியிலும் இந்தியாவுக்கு எதிராக தோல்வி பெற்றிருக்கிறது. தோல்வி பாதையில் இருந்து மீண்டு வர அடுத்த போட்டியில் பாகிஸ்தான் அணி கட்டாயம் வெல்ல வேண்டிய அவசியத்தில் இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles