காயத்தால் ரோஹித் சர்மா விலகல்? கேப்டன் பொறுப்பை ஏற்க உள்ளாரா பும்ரா.? சஞ்சனாவின் வலைதள பதிவு

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முக்கியமான போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த சூழ்நிலையில் பும்ராவின் மனைவி இந்திய டி20 அணியின் கேப்டனாக பும்ரா செயல்பட போகிறாரா? என்ற சந்தேகத்தை தற்போது சமூக வலைதளங்களில் பரவவிட்டுள்ளார்.

- Advertisement -

இந்திய டி20 அணியின் கேப்டனாக பொறுப்பேற்று தலைமை தாங்கி வழி நடத்திக் கொண்டிருப்பவர் ரோகித் சர்மா. அவருக்கு அடுத்தபடியாக துணை கேப்டனாக பதவி வகிப்பவர் ஹர்திக் பாண்டியா. இந்த சூழ்நிலையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்தியுள்ளது.

- Advertisement -

அதற்கடுத்த போட்டியாக பாகிஸ்தான் அணியோடு நாளை எதிர்கொள்ள உள்ளது. இந்த சூழ்நிலையில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணத்தினால் போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் ரோஹித் சர்மா.

- Advertisement -

காயம் அவருக்கு பெரிதாக உள்ளதா? அடுத்த போட்டியில் அவர் பங்கேற்பாரா? என்பது போன்ற சந்தேகங்கள் எழுந்த நிலையில் போட்டிக்குப் பிறகு காயத்தின் நிலை சிறிது தான் எனவும், அச்சப்படும் படி எதுவும் இல்லை எனவும் அவரே கூறி இருந்தார். பயிற்சியின் போது அவருக்கு ஏதேனும் வலி ஏற்பட்டால் அடுத்த போட்டியில் களமிறங்குவது குறித்து சந்தேகம் ஏற்பட்டது.

இந்த நிலையில் வேகப்பந்துவீச்சாளர் ஆன பும்ராவின் மனைவி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பும்ரா குறித்து ஒரு தகவலை பகிர்ந்திருந்தார். அது இப்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இதனால் அடுத்த போட்டியில் ரோஹித் சர்மா களமிறங்குவாரா? என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

அதில் அவர் “பும்ரா டாஸ் போடுவதைப் பார்க்க என்னால் காத்திருக்க முடியவில்லை” என்று கூறி இருக்கிறார்.அதாவது பும்ரா டாஸ் போடுவதை பார்க்க விரும்புவதாக சஞ்சனா கூறி இருக்கிறார். தற்போது இந்த பதிவே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு போட்டியில் கேப்டன் காயம் காரணமாகவோ அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ களமிறங்கவில்லை என்றால் அணியின் துணை கேப்டன் டாஸ் போடுவார்.

இதையும் படிங்க:ரோஹித் சர்மாவை வீழ்த்த ஒரே வழி இதுதான்.. இல்லையென்றால் அவர் என்ன செய்வார் என்று அனைவருக்கும் தெரியும்.. முகமது அமீர் பேட்டி

அதாவது துணை கேப்டன் ஆன ஹர்திக் பாண்டியாதான் டாஸ் போடுவார். அப்படிப் பார்த்தால் ரோஹித் சர்மாவிற்கு பிறகு ஹர்திக் பாண்டியாதான் கேப்டன் பொறுப்பை ஏற்பார். ஆனால் பும்ராவின் மனைவி இவ்வாறு கூறியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.நிஜமாகவே அவரது மனைவி அடுத்த போட்டியில் பங்கேற்பதைத்தான் கூறியிருக்கிறாரா? அல்லது வேறு ஏதேனும் விளம்பரமா? என்பது குறித்த தகவல் தெரியவில்லை. இதனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்றோ அல்லது நாளையோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles