ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிவடைந்து தற்போது அமெரிக்காவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் டி20 உலக கோப்பை தொடருக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக அமெரிக்கா சென்ற இந்திய அணி மிகத் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வந்தது.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் பயிற்சி போட்டியில் சிறப்பாக இந்திய அணி செயல்பட்டு வெற்றியும் கண்டது. ஆனால் முதல் பயிற்சி போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய சஞ்சு சாம்சன் பேட்டிங் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்திருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடரில் ஓரளவு சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி வரும் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், இந்த ஐபிஎல் தொடரிலும் தொடக்கத்தில் ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடி வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார்.
இதனால் இந்திய அணி டி20 உலக கோப்பைக்கு இரண்டு விக்கெட் கீப்பர்களை தேர்வு செய்யும் நிலையில், முதன்மை விக்கெட் கீப்பராக ரிஷப் பன்ட்டை தேர்வு செய்து, அதற்கு அடுத்த பேக்கப் விக்கெட் கீப்பருக்கு கே.எல் ராகுல் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரது பெயர் இடம் பெற்று இருந்த நிலையில், சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதை பார்த்து அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
ஆனால் டி20 உலக கோப்பைக்குப் பிறகு ஐபிஎல் தொடரிலும் சாம்சன் போதிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. இந்த சூழ்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்று கருதப்பட்டது. ஆனால் தொடக்க ஆட்டக்காரராக சாம்சன் களமிறங்கினாலும், அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் ஒரு ரன்னில் வெளியேறினார்.
இந்த சூழ்நிலையில் இவரது பேட்டிங் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவிக்கும் போது
“விக்கெட் கீப்பிங் திறமையை ஒப்பிட்டுப் பார்த்தால் சாம்சனை விட ரிஷப் பண்ட் சிறந்த விக்கெட் கீப்பர் என்று நினைக்கிறேன். நான் இங்கே பேட்டிங் குறித்து பேசவில்லை. ஆனால் போட்டியில் பேட்டிங்கும் முக்கிய அங்கம் பெறுகிறது. கடந்த சில போட்டிகளில் பண்ட் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார்.
இதையும் படிங்க:வீட்டுக்கு எங்களை சீக்கிரமா அனுப்பனும்னு ஐசிசி திட்டம் போட்டுருக்கு.. இதெல்லாம் நியாயமே இல்ல.. சிஎஸ்கே வீரர் வேதனை
மறுபுறம் சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடரை சிறப்பாக தொடங்கினார் விரும்பிய திசையில் ரன்களை. குவித்தார். ஆனால் உலகக்கோப்பை தேர்வுக்குப் பிறகு கடந்த நான்கு போட்டிகளில் அவர் பெரிதாக ரன்கள் எதுவும் அடிக்கவில்லை. ஆனால் வங்கதேசத்துக்கு எதிராக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க நல்ல வாய்ப்பாக அமைந்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு 50 முதல் 60 ரன்கள் வரை எடுத்திருந்தால் இந்த பிரச்சனையே இருந்திருக்காது. இதனால் சாம்சனை விட பண்ட்டுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார்.

