உலகக் கோப்பையில் விராட் கோலி இதை பண்ணியே ஆகணும்.. இல்லனா அவர டீம்ல எடுக்காதீங்க.. மேத்யூ ஹைடன் அதிரடி

டி20 உலக கோப்பை தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியை வருகிற ஐந்தாம் தேதி அயர்லாந்து அணியுடன் மோத உள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி இதனை செய்யவில்லை என்றால் அவரை அணியிலேயே சேர்க்கக் கூடாது என்று ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடினார். அந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி 700 ரன்களுக்கு மேல் குவித்து ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்ததற்கான ஆரஞ்சு தொப்பியை வென்றார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் வருகிற டி20 உலக கோப்பையில் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கங்குலி கூறியிருந்தார். விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினால் அவரால் 40 பந்துகளில் கூட சதம் அடிக்க முடியும் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் ஆன மேத்யூ ஹைடன் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கவில்லை என்றால் அவரை அணியில் சேர்க்கக்கூடாது என்று காட்டமான விமர்சனத்தை தெரிவித்து இருக்கிறார்கள். இது குறித்து அவர் மேலும் கூறும் பொழுது
“டி20 கிரிக்கெட் அணியில் எப்போதுமே வலது, இடது என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசை அமைக்க வேண்டும். டாப் 5 பேட்ஸ்மேன்கள் எப்போதும் வலது கை ஆட்டக்காரர்களாக அமைத்தால் அது எதிரணிக்கு தான் சாதகமாக முடியும்.

- Advertisement -

ஆஸ்திரேலியா போன்ற அணிகள் ஆடம் ஜாம்பாவை பயன்படுத்தி விக்கெட்டுகளை எடுத்து எதிரணியை வீழ்த்தி விடும். இதனால் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக ஜெய்ஸ்வாலுடன் களம் இறக்க வேண்டும். ரோகித் சர்மா கேப்டனாக எந்த இடத்தில் விளையாடினாலும் அவர் தனது அதிரடியை காட்டுவார். அவர் மிடில் வரிசையில் இறங்கி விளையாட வேண்டும். தொடக்கத்தை விட நான்காவது வரிசையில் இறங்கி விளையாடிய போது தான் ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்திருக்கிறார்.

இதையும் படிங்க:இந்தியா உலகக் கோப்பையை வெல்ல நான் காரணமில்லை.. இவர்கள் இல்லாமல் எதுவும் சாத்தியமாகாது.. ரகசியம் உடைக்கும் கௌதம் கம்பீர்

அதனால் அவர் மிடில் வரிசையில் களமிறங்கி விளையாட வேண்டும். இதனால் இந்த மாற்றத்தை இந்திய அணி நிர்வாகம் செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த சுரேஷ் ரெய்னா “விராட் கோலி நம்பர் 3 வரிசையிலேயே களமிறங்க வேண்டும். கோலி ஒரு ரன் மெஷின். அவர் மூன்றாவது வரிசையில் களமிறங்கி விளையாடிய போதுதான் அதிக ரன்கள் குவித்திருக்கிறார். எனவே அவர் மூன்றாவது வரிசையில் களமிறங்கவதே சிறந்தது” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles