ஐபிஎல்லில் இருந்து விடை பெற்றார் தமிழகத்தின் தங்க மகன்.. தோனிக்கு அடுத்ததாக சாதனை பட்டியலில் தினேஷ் கார்த்திக்

நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வினை அறிவித்தார்.

- Advertisement -

35 வயதாகி வரும் தினேஷ் கார்த்திக் ஏற்கனவே இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், தற்போது ஐபிஎல் தொடரில் இருந்தும் மொத்தமாக விளையாடி தனது ஓய்வினை அறிவித்திருக்கிறார்.

- Advertisement -

தினேஷ் கார்த்திக் மொத்தமாக ஐபிஎல் தொடரில் ஆறு அணிகளுக்காக விளையாடி இருக்கிறார். முதன்முதலாக 2008ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக தனது ஐபிஎல் வாழ்க்கையை தொடங்கினார். அங்கிருந்து மூன்று வருடங்கள் விளையாடிவிட்டு 2011ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக விளையாடினார்.

- Advertisement -

பிறகு 2012ஆம் ஆண்டு மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய இவர், அதற்குப் பிறகு 2014ஆம் ஆண்டு திரும்பவும் டெல்லி அணிக்காக விளையாடினார். 2015ஆம் ஆண்டு பெங்களூர் அணிக்காக ஒரு முறை விளையாடிவிட்டு 2016 மற்றும் 17ஆம் ஆண்டுகளில் குஜராத் அணிக்காக விளையாடினார். அதற்குப் பிறகு 2018ஆம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்ற இவர், கொல்கத்தா அணிக்காக 19 போட்டிகளை வென்று கொடுத்துள்ளார்.

கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்ட கௌதம் கம்பீர், கேப்டனாக 61 போட்டிகளை வென்று கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தலைமையில் கொல்கத்தா அணி சிறப்பான வெற்றிகளை பதிவு செய்தது என்றே சொல்லலாம். கேப்டன் பொறுப்பில் சிறந்து விளங்கிய தினேஷ் கார்த்திக் அதற்கு பிறகு 2022ம் ஆண்டு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாட துவங்கினார்.

- Advertisement -

2022ஆம் ஆண்டு தினேஷ் கார்த்திக்கிற்க்கு ஒரு பொன்னான ஆண்டாக அமைந்தது என்றே சொல்லலாம். அந்த வருடத்தில் பினிஷராக களம் இறங்கி பெங்களூர் அணிக்காக பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். அதுமட்டுமில்லாமல் அவரது அவ்வாறு ஆட்டத்தின் மூலம்தான் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையிலும் அவரை தேர்வு செய்ய வைத்தது.
2023ஆம் ஆண்டு இவருக்கு சிறப்பாக அமைய விட்டாலும், இந்த ஆண்டும் பெங்களூர் அணிக்காக சிறப்பாக விளையாடி சில நல்ல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க:முதல் பாதியில் எங்கள் தரத்திற்கு ஏற்ப விளையாடவில்லை.. இரண்டாவது பாதியில் ஒவ்வொருவரும் இதை உணர்ந்தோம்.. விராட் கோலி நெகிழ்ச்சி பேட்டி

இந்த வருடத்திலாவது ஆர்சிபி கோப்பையை கைப்பற்றி இவருக்கு பிரியாவிடை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான பிளே ஆப் போட்டியில் தோல்வியுடன் இவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தப் போட்டி அவருக்கு தோல்வி அமைந்தாலும், ஒரு கிரிக்கெட்டராக அவர் எப்போதோ சாதித்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஐபிஎல் போட்டிகளில் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக 4463 ரன்கள் குவித்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார். முதல் இடத்தில் மகேந்திர சிங் தோனி 5000 ரன்களுக்கு மேல் கடந்து முதலிடம் வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles