தோனி கேப்டனா இருந்தா அது எதிரணிக்கு கண்டிப்பா பயம் தான்.. சூழ்நிலையைக் கணிப்பதில் அவர் வல்லவர்.. டிவில்லியர்ஸ் பேட்டி

இந்த ஐபிஎல் சீசனில் நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியதை தொடர்ந்து மகேந்திர சிங் தோனி கேப்டனாக இருந்திருந்தால் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும் என்று ஆர்சிபி முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனை தொடங்குவதற்கு முன்பாக அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி தனது கேப்டன்சியை சிஎஸ்கேவின் தொடக்க ஆட்டக்காரர் ருத்ராஜிடம் ஒப்படைத்தார்.

- Advertisement -

ருத்ராஜின் கேப்டன்சி மோசம் சொல்லும் அளவுக்கு இல்லை என்றாலும், முக்கியமான நேரங்களில் தோனியை போன்று முடிவுகளை எடுக்கத் தவறியது. மேலும் ஸ்பின்னர்களை பயன்படுத்திய விதத்தில் சற்று கோட்டை விட்டது போல் தெரிந்தது. மேலும் அணி வீரர்களின் காயமும் சிஎஸ்கேவிற்கு பெரிய பிரச்சினையாக அமைந்தது.

- Advertisement -

பென்ச்சில் அமர வைக்கப்பட்ட வீரர்களை வைத்தே ஏழு வெற்றிகளைப் பெற்று முக்கியமான போட்டியில் மட்டும் தோல்வியை தழுவி பரிதாபமாக வெளியேறியது.  இந்த சூழ்நிலையில் ஆர்சிபி அணியின் முன்னாள் ஜாம்பவான் டிவில்லியர்ஸ் மகேந்திர சிங் தோனி கேப்டனாக இருந்திருந்தால் முடிவுகள்சென்னை அணிக்கு வேறு மாதிரி இருந்திருக்கும் என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது
“மகேந்திர சிங் தோனி கேப்டனாக இல்லாத போது கேப்டன்சி பொறுப்பு வீணாகப் போகிறது என்று நினைத்தேன். மேலும் இந்த முறையும் அவர் கேப்டனை மாற்றியது சென்னை அணிக்கு  பலனளிக்காமல் போய்விட்டது. பெரும்பாலான போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நன்றாக விளையாடினாலும் அது நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெறாமல் போய்விட்டது.

- Advertisement -

இதில் ருத்ராஜ் தவறு எதுவும் இல்லை. ஆனால் மகேந்திர சிங் தோனி கேப்டனாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். தோனி கேப்டனாக இருந்தபோது நான் பலமுறை அவரை எதிர்த்து விளையாடி இருக்கிறேன். அவர் சூழ்நிலைகளை கணித்து அதிரடியாக முடிவுகளை எடுப்பதில் வல்லவர். அவர் கேப்டனாக இருப்பது எப்போதும் எதிரணிக்கு அச்சுறுத்தக் கூடிய வகையில் அமையும்.

இதையும் படிங்க:எங்களைப் போல மற்ற அணிகள் இதை செய்திருக்குமா? என்று தெரியவில்லை.. எங்களை நினைத்தால் பெருமையாக உள்ளது.. தோல்விக்குப் பின்னர் டு பிளஸ்சிஸ் பேட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பயமுறுத்தக் கூடிய விஷயம் என்று எதுவும் இல்லை என்றாலும், அவர்கள் அணிக்கு என்ன தேவையோ அந்த விஷயங்களை மெதுவாக எடுத்துச் செல்வார்கள். அதுதான் அவர்களது வெற்றி பார்முலா. ருத்ராஜ் தற்போது கேப்டன் ஆக தொடர வேண்டும். எதிர்காலங்களில் அவர் சிஎஸ்கே அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக இருப்பார்” என்று கூறியிருக்கிறார். ருத்ராஜ் கேப்டன்ஷியில் மேலும் முன்னேற்றம் காண வேண்டிய அவசியம் இருப்பதால் டோனி தனது அடுத்த சீசனில் அணியின் நலனுக்காக களம் இறங்கி விளையாடுவார் என்று தெரிகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles