நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடித்தது.
மும்பை அணி இறுதி வரை போராடினாலும் அந்த அணியால் வெற்றி இலக்கை அடைய முடியவில்லை. இந்த நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து ஹர்திக் பாண்டியா சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
மும்பை அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியின் முன்னணி வீரரான பும்ராவுக்கு இந்த போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டது. மேலும் திலக் வர்மா காயம் காரணமாக வெளியேற, இவர்களுக்கு பதிலாக பிரேவிஸ் மற்றும் அர்ஜுன் டெண்டுல்கர் ஆகியோர் வாய்ப்பை பெற்றனர்.
இந்த நிலையில் முதலில் பேட்டிங் தொடங்கிய லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது. கேப்டன் கே எல் ராகுல் 41 பந்துகளில் 55 ரன்கள், பூரான் 29 பந்துகளில் 75 ரன்கள் குவித்து இந்த இலக்கை மும்பை அணிக்கு நிர்ணயித்தது.
அதற்குப் பின்னர் களமிறங்கிய மும்பை அணி முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, ஒரு முனையில் போராட மறுமுனையில் வந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அணியால் 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா 38 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார்.
இந்த தோல்விக்கு பின்னர் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறும் பொழுது
“இந்த சூழ்நிலை மிகவும் கடினமாக உள்ளது. நாங்கள் தரமான கிரிக்கெட்டை விளையாட தவறி விட்டோம். இது தொழில் முறை உலகம் என்பதால் நாம் எப்போதும் கால்களை சிறந்த முறையில் எடுத்து வைக்க வேண்டும்.
இங்கு நல்ல நாட்கள் மட்டும் கெட்ட நாட்கள் என்று இரண்டுமே இருக்கும். நாங்கள் ஒரு அணியாக நல்ல ஸ்மார்ட் கிரிக்கெட்டை விளையாட தவற விட்டுள்ளோம். என்ன நடந்தது என்பதை ஆராய்வதற்குள் முழு ஐபிஎல் சீசனுமே முடிந்து விட்டது. இந்த போட்டியையும் அதில் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க:சிஎஸ்கே தோனியின் இடத்தில் இப்போ நான் இருக்கணும்.. அன்னைக்கு எனக்கு அது தோணல.. ரகசியம் உடைக்கும் சேவாக்
இந்த போட்டியின் மூலம் இரு அணிகளுக்கும் கடைசியில் லீக் போட்டி முடிவடைந்துள்ளது. மும்பை அணி 10 தோல்விகள் உடன் கடைசி இடத்திலும், லக்னோ அணியை ஏழு வெற்றிகள் உடன் ஆறாவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

