நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான முக்கியமான லீக் போட்டி நடைபெறுவதால் இரு அணி வீரர்களும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தோனி திடீரென பெங்களூர் அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமுக்குள் விசிட் செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாளை இரவு 07.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான முக்கியமான லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நான்காவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான போட்டி முக்கியமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி பேட்டிங் மற்றும் கீப்பிங்கை தாண்டி பந்துவீச்சிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் நாளை நடைபெற உள்ள போட்டியில் சர்ப்ரைஸ் ஆக பவுலிங் போடப் போகிறார் என்பது தெரிகிறது. இந்த இரு அணிகளுக்குமே நாளை முக்கியமான போட்டி என்பதால் இது சுவாரசியத்திற்கு பஞ்சம் இருக்காது.
இந்த நிலையில் போட்டிக்காக பயிற்சி மேற்கொண்டிருந்த தோனி திடீரென ஆர் சி பி ட்ரெஸ்ஸிங் ரூமிற்குள் விசிட் செய்தார். அப்போது அங்கே இருந்த பெங்களூர் அணியின் வீரர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோருடன் டீ அருந்திவிட்டு ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது பயிற்சியில் ஈடுபட்டிருந்த விராட் கோலியின் புகைப்படங்களும் ட்ரெண்டிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நாளை நடைபெற உள்ள இரண்டு அணிகளில் ஏதேனும் ஒரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்த வரை பெங்களூர் அணியை வீழ்த்தினால் மட்டும் போதும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடும். ஆனால் பெங்களூர் அணியை பொறுத்தவரை வெற்றி மட்டும் இல்லாமல் சில புள்ளி விவரங்களும் சேர்த்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
இதையும் படிங்க:தோனி 4 அல்லது 5 ஓவர்கள் களமிறங்க வேண்டும்.. அப்போதுதான் அவரால் இதை செய்ய முடியும்.. இர்ஃபான் பதான் பேச்சு
பெங்களூர் அணி சென்னை அணியை 18 ஓவர்களில் அல்லது 11 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் மட்டுமே பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். இதில் ஏதேனும் ஒன்று நடைபெறவில்லை என்றாலும் கூட சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடும். தற்போது புள்ளிகள் பட்டியலில் சென்னை அணி நான்காவது இடத்திலும் பெங்களூர் அணி ஐந்தாவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Welcome to Bengaluru, Mahi! ❤️https://t.co/ERTQi47Mtr#PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 #RCBvCSK
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 16, 2024

