ஒரே ஒரு மழைதான்.. சன்ரைசர்ஸ், குஜராத் ஆட்டம் ரத்து.. சிஎஸ்கேவின் இரண்டாவது இடத்திற்கு ஆப்பு.. புள்ளி விவரங்கள் சொல்வது என்ன?

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான 66 வது லீக் போட்டி தற்போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டு ஒரு ஓவர் கூட வீசப்படாத நிலையில் முடித்துக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில் புள்ளி பட்டியலில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

- Advertisement -

சன்ரைசர்ஸ் அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற இருந்த இந்த போட்டி மழையின் காரணமாக அதிக நேரம் காத்திருந்தும் மழை விடாத காரணத்தினால் ஒரு பந்து ஓட வீசப்படாத நிலையில் போட்டி முடித்துக் கொள்ளப்பட்டது. குஜராத் அணியை பொறுத்தவரை 13 போட்டிகளில் 11 புள்ளிகள் பெற்றிருந்த நிலையில் கடந்த போட்டியும் மழையின் காரணமாக கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியும் தடைபட்டது.

- Advertisement -

மேலும் தற்போது ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியும் தடைபட்டுள்ளதால் 12 புள்ளிகளைப் பெற்று ப்ளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறி எட்டாவது இடத்தில் உள்ளது. அதுவே சன்ரைசர்ஸ் அணியைப் பொறுத்தவரை 13 போட்டிகளில் 14 புள்ளிகள் உடன் நான்காவது இடத்தில் இருந்தது

- Advertisement -

இந்தப் போட்டியின் மூலம் ஒரு புள்ளி அதிகமாக பெற்று மூன்றாவது இடத்தில் இருந்த சிஎஸ்கேவை நான்காவது இடத்திற்கு தள்ளி சன்ரைசர்ஸ் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இதன் மூலம் தற்போது பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இதுவரை மொத்தம் கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன.

வருகிற சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியின் மூலம் நான்காவது அணி தீர்மானிக்கப்படும் அந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். மாறாக பெங்களூர் அணி வெற்றி பெற வேண்டுமானால் 18 ஓவர்களிலோ அல்லது 11 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

- Advertisement -

இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை தோல்வி அடைந்திருந்தால் சென்னை அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறுவதற்கு கூட வாய்ப்புகள் இருந்தது. இப்போதும் அந்த வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் சன்ரைசர்ஸ் அணி தனது அடுத்த போட்டியில் தோல்வியும், ராஜஸ்தான் அணி அடுத்த போட்டியில் தோல்வியும், சென்னை அணி வெற்றியும் பெற்றால் இரண்டாவது இடத்திற்கு முன்னேறும்.

இதையும் படிங்க:2007 டி20 உலக கோப்பைல தோனி இதைத்தான் பண்ணாரு.. அதேபோல இப்போது ரோகித் ஷர்மா செய்வாரா.? கேள்வி கேட்கும் ஹர்பஜன் சிங்

மாறாக இந்த மூன்றில் ஏதேனும் ஒன்று நடக்கவில்லை என்றாலும் நான்காவது அணியாக தான் சென்னை அல்லது பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இதன் இறுதி முடிவு வருகிற சனிக்கிழமை தெரிந்து விடும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles