டி20 உலகக் கோப்பை.. துளியும் விரும்பாத ரோஹித் சர்மா.. ஹர்திக் பாண்டியாவை சேர்க்கச் சொன்ன பிசிசிஐயின் முக்கிய புள்ளி.. வெளியான தகவல்

டி20 உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட்டது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், பிசிசிஐயின் முக்கிய புள்ளி ஒருவர் ஹர்திக் பாண்டியாவை சேர்க்க வேண்டும் என்று ரோகித் சர்மாவிற்கும், அஜித் அகர்க்கருக்கும் அழுத்தம் கொடுத்ததாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.

- Advertisement -

ஹர்திக் பாண்டியாவை டி20 உலக கோப்பையில் சேர்க்கப்பட்டதில் இருந்து பல்வேறு குழப்பங்கள் எழுந்து வரும் நிலையில், இதில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கும் தேர்வுக்குழு தலைவருக்கும் விருப்பம் இல்லை என்ற தகவல் வெளியாகிறது. பிசிசிஐ கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும் ஒரு தரப்பில் கூறப்படுகிறது.

- Advertisement -

இது தொடர்பாக டானிக் ஜகரன் என்ற இந்தி செய்தித்தாளில் வெளிவந்துள்ள அறிக்கையின் படி, ஹர்திக் பாண்டியா நடப்பு ஐபிஎல் தொடரிலும் மேலும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு பிறகு பெரிதாக டி20 தொடர்களில் விளையாடாததால் அவரது பார்ம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. இதன் காரணமாகவே அவரை டி20 உலக கோப்பைக்கு தேர்வு செய்ய வேண்டாம் என்று முடிவு செய்ததாகவும் அவருக்கு பதிலாக சிவம் தூபேவை பயன்படுத்தலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சிவம் தூபே தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் வேளையில் ஹர்திக் பாண்டியாவின் இடத்தை அவர் நிரப்புவார் என்றும் நம்பப்பட்டது. இதை உறுதியளிக்கும் விதமாகவே தூபேவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மிகச் சிறப்பான முறையில் விளையாடி வந்தார்.

ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முக்கிய புள்ளிகள் ஹர்திக் பாண்டியாவை கண்டிப்பாக அணியில் சேர்க்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததாக அந்த செய்தி தாளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்த ரோகித் சர்மா டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு கூறிய வடிவ கிரிக்கெட்டில் ஓய்வு பெறப்போவதாக முடிவு செய்திருப்பதாகவும் அந்த செய்தித்தாள் கூறுகிறது.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா இந்தியாவின் சிறந்த ஆல் ரவுண்டராக பார்க்கப்பட்டாலும், அவரது நடப்பு பார்ம் கவலை அளிக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடி வெறும் 200 ரன்கள் மட்டுமே குவித்திருக்கிறார். அவரது பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 144 ஆக உள்ளது. மேலும் பந்து வீச்சிலும் 11 விக்கெடுகள் மட்டுமே வீழ்த்தி இருக்கிறார்.

இதையும் படிங்க:நீங்கள் புது பிளேயர் இல்லை.. உங்களால் என்ன முடியும் என்பதை தெரிவிக்க வேண்டிய நேரம் இது.. சாம்சனுக்கு கௌதம் கம்பீர் கூறும் அறிவுரை

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா துணை கேப்டன் ஆக நியமிக்கப்பட்டாலும் உலகக்கோப்பையிலும் தொடர்ச்சியாக சரியாக விளையாடாத பட்சத்தில் ரோகித் சர்மா அவரை நீக்கி விடுவார் என்றே தெரிகிறது. ஏனெனில் 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை வந்து தவறவிட்ட பட்சத்தில் இந்த டி20 உலக கோப்பையை நிச்சயம் கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் ரோஹித் சர்மா இருப்பதாக கூறப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles