வெற்றி பெற்றும் சோகம்.. பிளே ஆப் சுற்றை விட்டு வெளியேறுகிறது டெல்லி அணி.. 19 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது

லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான 64வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை தோற்கடித்து இருக்கிறது.

- Advertisement -

அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங் தொடங்கிய டெல்லி அணிக்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரேசர் மெக்கர்க் இந்த முறை ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து வெளியேறினார். இருப்பினும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் பொரெல் சிறப்பாக விளையாடி 33 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

மேலும் சாய் ஹோப் 27 பந்துகளில் 38 ரன்கள், கேப்டன் பண்ட் 23 பந்துகளில் 33 ரன்கள் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஸ்டெப்ஸ் 25 பந்துகளில் 57 ரன்கள் குவித்தனர். இதனால் டெல்லி அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. லக்னோ அணித்தரப்பில் நவீன் உல் ஹக் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

- Advertisement -

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி லக்னோ அணி களம் இறங்கியது. ஆனால் பவர் பிளேவிற்குள் கேஎல் ராகுல், டி காக், ஸ்டானிஸ் மற்றும் தீபக் ஹூடா ஆகிய முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை விரைவிலேயே இருந்ததால் அந்த அணியால் அதற்குப் பிறகு வெற்றி பெற முடியவில்லை. இருப்பினும் அதற்கு பின்பு களமிறங்கிய பூரான் 27 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். இதில் ஆறு பௌண்டரிகளும் நான்கு சிக்சர்களும் அடங்கும்.

பின்னர் இறுதிக்கட்டத்தில் விளையாடிய அர்சத் கான் 33 பந்துகளில் 58 ரன்கள் குவித்து தனது திறமையை நிரூபித்தார். இதில் மூன்று பவுண்டரிகளும் ஐந்து சிக்சர்களும் அடங்கும். இருப்பினும் லக்னோ அணி இறுதியாக 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் மட்டுமே குவித்தது.

- Advertisement -

இதனால் 19 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி லக்னோ அணியை தோற்கடித்து தனது ஏழாவது வெற்றியை பதிவு செய்தது. டெல்லி அணித்தரப்பில் சிறப்பாக பந்து வீசியை இசாந்த் சர்மா நான்கு ஓவர்களில் 34 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையும் படிங்க:அடி தூள்.. இந்திய அணிக்கு சிஎஸ்கேவின் ஸ்டீபன் பிளமிங் அடுத்த பயிற்சியாளரா.? இது மட்டும் நடந்தால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்

இந்தப் போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் மிகவும் குறைவாக இருப்பதால் பிளே ஆப் சுற்றை விட்டு வெளியேறுகிறது. மேலும் இந்த போட்டியில் தோல்வியடைந்த லக்னோ அணியும் பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறுகிறது. இந்நிலையில் மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு பெங்களூர், சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் போட்டி போடுவது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles