அடி தூள்.. இந்திய அணிக்கு சிஎஸ்கேவின் ஸ்டீபன் பிளமிங் அடுத்த பயிற்சியாளரா.? இது மட்டும் நடந்தால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தற்போது செயல்பட்டு வரும் நிலையில், அவரது பதவி காலம் வருகிற டி20 உலக கோப்பை தொடருடன் முடிவடைகிறது. டிராவிட்டின் பதவிக்காலம் அதற்கு முன்னரே முடிவடையும் நிலையில் இருந்தபோது இந்திய கிரிக்கெட் வாரியம் டி20 உலக கோப்பை வரை பயிற்சியாளராக இருக்குமாறு கேட்டுக் கொண்டது.

- Advertisement -

தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில் தற்போது அந்தப் பதவிக்கு சிஎஸ்கே அணியின் தலைமை பயிர்ச்சியாளரான ஸ்டீபன் பிளமிங் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளராக விளங்கிவரும் ஸ்டீபன் பிளமிங் ஐபிஎல் பயிற்சியாளர்களில் தற்போது வெற்றிகரமான பயிற்சியாளராக திகழ்ந்து வருகிறார். இவரது நிர்வாகத்தின் கீழ் சிஎஸ்கே அணி தற்போது ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. மேலும் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற சாம்பியன் டிராபி தொடரையும் கைப்பற்றி அசத்தியிருக்கிறது.

- Advertisement -

இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மட்டுமல்லாமல் சென்னை நிர்வாகம் அமெரிக்காவில் வாங்கியிருக்கும் டி20 அணிக்கும், மற்றும் தென்னாபிரிக்காவில் வாங்கி இருக்கும் டி20 அணிக்கும் மேலும் இங்கிலாந்தின் 100 பந்து தொடரான சதர்ன் பிரேக் அணிக்கும் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

தற்போது நவீன கால கிரிக்கெட்டுக்கு ஏற்ப அணியின் சூழ்நிலையை கண்காணித்தல், வீரர்களுக்கு தேவையானவற்றை நிர்வகித்தல், புதிய திட்டங்களை கொண்டு வருதல், வெற்றிகரமான அணியை உருவாக்குதல் போன்றவைகளில் சென்னை அணிக்கு ஸ்டீபன் பிளமிங் சிறப்பாக செய்து வருவதால் இவரது சேவையை தற்போது இந்திய கிரிக்கெட் வாரியமும் விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

ஆனால் இது குறித்து பிளம்மிங் கூறும் போது சிஎஸ்கே நிர்வாகத்துடன் இந்திய கிரிக்கெட் சார்பில் எவரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும், இந்திய பயிற்சியாளர் பதவிக்கு தான் விண்ணப்பிக்கவில்லை என்றும் அவரது தரப்பில் கூறியிருக்கிறார். ஆனால் பின்னாளில் இது குறித்த செயல்பாடுகள் நிச்சயமாக நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:நீங்க ரெண்டு பேரும் கேப்டனா இருந்தப்போ என்ன சாதிச்சு இருக்கீங்க.. ஹர்திக் பாண்டியாவை மட்டும் குறை சொல்றதுக்கு.. ஆதரவாக களமிறங்கும் கௌதம் கம்பீர்

தற்போது செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட்க்கு திரும்ப இந்திய அணிக்கு பயிற்சியாளராக வர விருப்பம் இல்லை என்பது போல தெரிகிறது.இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி 50 ஓவர் உலகக் கோப்பையில் இறுதிப்போட்டி வரை வந்தது குறிப்பிடத்தக்கது. பயிற்சியாளர் பதவிக்கு ஆஸ்திரேலியாவின் ஜஸ்டின் லாங்கர் பெயர் ஏற்கனவே அடிபடும் நிலையில் தற்போது ஸ்டீபன் பிளமிங் பெயரும் அடிபடுகிறது. இதனால் தற்போது இந்திய பயிற்சியாளர் தவிர வெளிநாட்டு பயிற்சியாளரே இந்திய அணிக்கு வர அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles