சேப்பாக்கம் பிட்ச் எங்கள விட யாரு நல்லா புரிஞ்சுக்கவா.? அதனாலதான் இவங்களுக்கு சரியா இதை பண்ணினேன்.. சிஎஸ்கே வீரர் சிமர் ஜித் சிங் பேட்டி

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் பேட்டிங்க்கு பின்னர் சிறப்பாக பந்து வீசிய சிஎஸ்கே வீரர் சிமர்ஜித் சிங் ஆடுகளம் குறித்து முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.

- Advertisement -

இதன்படி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்க விக்கெட் ஓரளவு சிறப்பாக அமைந்தது. ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 43 ரன்கள் குவித்தது. 21 பந்துகளில் ஜெய்ஸ்வால் 24 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார். இதில் மூன்று பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சரும் அடங்கும்.

- Advertisement -

அதற்குப் பிறகு மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பட்லர் 25 பந்துகளில் 21 ரன்கள் குவித்த நிலையில் வெளியேற, அதன் பிறகு சீரான வரிசையில் ராஜஸ்தான் அணியின் விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 19 பந்துகளில் 15 ரன்கள் அடித்த நிலையில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

- Advertisement -

சென்னை மைதானம் மாலை வேலை சூழ்நிலையில் மிகவும் ஸ்லோவாகவே காணப்பட்டது. அதன் பிறகு ரியான் பராக் மற்றும் ஜூரேல் ஜோடி ஓரளவு ராஜஸ்தான் அணியின் ரன்களை ஓரளவு உயர்த்தியது. ரியான் பராக் 35 பந்துகளில் 47 ரன்களும் ஜுரேல் 18 பந்துகளில் 28 ரன்களும் குவித்தனர். இதனால் இறுதியாக ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் அபாரமாக பந்து வீசிய சிம்மர் ஜீத் சிங் தொடக்க மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரின் பந்துவீச்சில்தான் ராஜஸ்தான் அணியின் சரிவு ஆரம்பித்தது.

ராஜஸ்தான் அணியின் பேட்டிங்க்கு பிறகு பேசிய சிஎஸ்கே வீரர் சிமர்ஜித் சிங் இது குறித்து கூறும் போது
“சேப்பாக்கம் மைதானத்தின் வெயில் சற்று அதிகமாகவே இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இங்குள்ள சூழ்நிலை மற்றும் ஆடுகளத்தின் தன்மை குறித்து எங்களுக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும் முன்னணி அணிக்கு எதிராக நாங்கள் இன்னும் சற்று அதிகமாக முயற்சி செய்ய வேண்டி இருந்தது.மேலும் இந்த ஆடுகளத்தில் பந்து சாதாரணமாக இல்லாமல் ஒட்டிக் கொண்டு வந்தது.

- Advertisement -

இதன் காரணமாக நான் பேட்ஸ்மேன்களின் வழியில் பந்து வீசாமல் என்னுடைய வழியில் பந்து வீச திட்டம் போட்டு அதன் படி சரியாக வீசினேன். மற்ற அணிகளின் திட்டம் என்ன என்பது எனக்கு தெரியாது. நாங்கள் நன்றாக பேட்டிங் செய்து வருகிறோம். ராஜஸ்தான் அணியின் பேட்டிங் சரி சமமாகவே உள்ளது. நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்தால் இந்த போட்டியில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை உள்ளது” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:துஷார்தேஷ் பாண்டே, சிமர்ஜித் சிங் வேகத்தில் சரிந்த ராஜஸ்தான்.. ஆறுதல் அளித்த ரியான் பராக்.. சிஎஸ்கே அபாரமான பந்துவீச்சு

இதன்படி பேட்டிங் தொடங்கி தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. ரச்சின் ரவீந்திரா 27 ரன்களும், மிச்சல் 22 ரன்களும் குவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ருத்ராஜ் மற்றும் மொயின் அலி ஆகியோர் களத்தில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles